பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - அன்பில் மகேஷ் அழைப்பு

Re Exam For Absent Students : பல்வேறு காரணங்களுக்காக பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மறுதேர்வை எழுத நடவடிக்கை எடுத்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 4, 2022, 07:00 PM IST
  • பொதுதேர்வு எழுதாத மாணவர்களின் கதி என்ன ?
  • மீண்டும் மறுதேர்வை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
  • எப்படியாவது மாணவர்களை எழுத வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு - அன்பில் மகேஷ் அழைப்பு  title=

திராவிட இயக்கம் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய கடந்த 50 ஆண்டுகளில் எந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோ இல்லையோ, பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்தும் அளித்தது. இரு திராவிடக் கட்சிகளின் தலைவர்களும், எப்படியாவது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் படித்துவிட வேண்டும் அல்லது அவர்களை எப்படியாவது பள்ளிகளை நோக்கி அழைத்துவர வீரியமாக செயல்பட்டனர். அதற்காக போட்டி போட்டிக்கொண்டு திட்டங்களை அறிவித்த மாநிலம் இது. 

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் கல்வி அமைப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. மாணவர்களின் வகுப்பறை கட்டமைப்பு மனநிலையும் பெருமளவு மாறியிருக்கின்றன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | பணியில் நீடிக்கத் தகுதியில்லை; ஊதிய உயர்வு பெற உரிமையில்லை: ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் ஷாக்

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக மாணவர்களை ஆல் பாஸ் செய்ததன் காரணமாக, உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மீது ஒருவித அலட்சியத்தை ஏற்படுத்திவிட்டதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கணிக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதுவரையிலான பொதுத்தேர்வு நிகழ்வில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். மாணவர்களை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற திராவிட ஆட்சியாளர்களின் கனவில் பெரும் இடியாக இந்தச் செய்தி விழுந்திருக்க வேண்டும். குறிப்பாக, 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தியுள்ளார். 

காலை, மதிவு உணவுகள், சைக்கிள், லேப்டாப் கொடுத்து பள்ளிக்கு அழைத்து வந்த மாணவர்கள், இப்படித் தேர்வு எழுதாமல் போனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அப்படியே விட்டுவிடுமா என்ன ?. தேர்வு எழுதாத மாணவர்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து, உடனடியாக தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | 10, +1, +2 மாணவர்களுக்கு நல்ல செய்தி - ஆசிரியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட வாய்மொழி உத்தரவு.!

இதேபோல், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். மறுதேர்வு வாய்ப்பை மாணவர்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

 

Trending News