வண்டலூர் சிம்பன்ஸி ஆதித்யாவுக்கு முதல் பிறந்த நாள் - கேக் வெட்டி உற்சாகம்

Vandalur Chimpanzee Adithya : வண்டலூரில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த சிம்பன்ஸி ஆதித்யாவுக்கு முதல் பிறந்த நாள் விழா. அனைவரும் கேக் வெட்டி கொண்டாட்டம்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 10, 2022, 08:01 PM IST
  • வண்டலூரில் குட்டி சிம்பன்ஸி ஆதித்யாவுக்கு முதல் பிறந்த நாள்
  • வனத்துறை அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர்
  • பார்வையாளர்கள், வனக்குழுவினரின் செல்லமாக விளங்கும் ‘ஆதித்யா’
வண்டலூர் சிம்பன்ஸி ஆதித்யாவுக்கு முதல் பிறந்த நாள் - கேக் வெட்டி உற்சாகம் title=

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் குறித்தான செய்திகள் அவ்வபோது வந்தவண்ணம் இருக்கும். அடிக்கடி புலிக்குட்டிகளுக்கு பெயர் வைப்பது போன்ற நிகழ்வுகளெல்லாம் வெகுப் பிரசித்தம். அதுவும், அப்போது ஆட்சியில் உள்ள முதலமைச்சர்கள் கூட வண்டலூரில் பிறக்கும் விலங்குகளுக்கு பெயர் வைப்பதுண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூட வண்டலூர் புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்த சம்பவங்களெல்லாம் உண்டு. அங்குள்ள உயிரினங்கள் எப்போதும் பார்வையாளர்களுக்கு விருந்து படைப்பவை. 

இந்நிலையில், வண்டலூரில் வளர்ந்து வரும் குட்டி சிம்பான்ஸியின் முதல் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.  குட்டி சிம்பன்ஸிக்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யாவின் விளையாட்டுத்தனமான செயல்களும் அன்பான பிணைப்பும் வண்டலூர் குழுவினர் மட்டுமல்லாமல் விருந்தினர் மற்றும் பார்வையாளர்களாலும் மிகவும் விரும்பப்படுகின்றன. இதனால் ஆதித்யாவின் முதல் பிறந்த நாள் உயிரியல் பூங்காவின் குழுவினரால் கொண்டாடப்பட்டது. 

மேலும் படிக்க | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த வங்க புலி: மங்களூரு பூங்காவுடன் விலங்கு பரிமாற்றம்

மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் டாக்டர்.ஆர்.காஞ்சனா ஐ.எஃப்.எஸ் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் சிம்ப் குடும்பத்திற்கு மிகவும் பிடித்த விருந்தான உறைந்துப் போன பழங்களும், கேக்குகளும் வழங்கப்பட்டன. பிறந்த நாள் அதுவுமாக பழங்களை ஆதித்யா உற்சாகமாக சாப்பிட்டது. 

இதனிடையே, வண்டலூர் பூங்கா நிர்வாகம் பல்வேறு மாற்றங்களையும் முன்னெடுத்து வருகிறது. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வண்டலூர் பூங்காவும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்திருக்கிறது. பூங்காவிற்குள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முற்றிலும் எடுத்துச்செல்லக் கூடாது என்ற தடையில்லை. யதார்த்ததைக் கணக்கில் கொண்டு புதிய முயற்சியை பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

zoo

அதாவது, வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 10 ரூபாய் பெறப்படும். அங்குள்ள கடைகளில் 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கினாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக 10ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொள்ளப்படும். உள்ளே சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வந்து ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை ஒப்படைத்துவிட்டு பத்து ரூபாயை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. டப்படுகின்றது. இதனையொட்டி உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து "ஒரு நபர் ஒரு மரம்" என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் தணிப்பு மற்றும் பூங்காவில் பசுமையான சூழலை மேம்படுத்தும் விதமாக வண்டலூர் பூங்கா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | கொளுத்தும் வெயில்... தவிக்கும் விலங்குகள் - அண்ணா உயிரியல் பூங்காவின் ஏற்பாடுகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News