சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஃபேஷன் ஷோ... சென்னையில் ஒரு மாற்று முன்னெடுப்பு

ஆசிட் வீச்சில் இருந்து பிழைத்த 'பாபி' கலந்து கொண்ட சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலான ஃபேஷன் ஷோ சென்னையில் நடைபெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 18, 2022, 09:59 AM IST
  • இந்நிகழ்ச்சியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி முன்னிலை வகித்தார்.
  • அனைவரும் சமம் என்கிற சமத்துவ ரேம்ப் வாக் அனைவரையும் ஈர்த்தது.
சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஃபேஷன் ஷோ... சென்னையில் ஒரு மாற்று முன்னெடுப்பு title=

உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான ஃபேஷன் ஷோக்கள் மிகவும் பிரபலமானவை. ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் தயாரிப்புகள் இந்த ஃபேஷன் போட்டியிடுவார்கள். இந்த நிகழ்ச்சிகளில், புது புது வடிவமைப்பிலான ஆடைகளை அணிந்துவரும் மாடல்களின் வீடியோக்கள் அதிக பகிரப்படுவது வழக்கம். 

ஆனால், வழமையானதை தாண்டி பல்வேறு புதிய முயற்சிகளும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கும் ரீதியிலான முன்னெடுப்புகளும் தற்போது ஃபேஷன் ஷோக்களின் அரங்கேறுகிறது.  அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற 'ரவுண்ட் டேபிள் இந்தியா' அமைப்பின் சார்பில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஃபேஷன் ஷோ நேற்று (நவ. 17) நடைபெற்றது. 

மேலும் படிக்க | தமிழர்கள் காசிக்கு செல்ல வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை மாற்றுத்திறனாளிகள்,  விமான நிலைய அதிகாரிகளின் நண்பர்கள், திருநங்கைகள் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின்  உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சமம் என்கிற சமத்துவ ரேம்ப் வாக் செய்தது விமான நிலையம் வந்திருந்த பயணிகளை வெகுவாக ஈர்த்தது.  இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான அப்சரா ரெட்டி முன்னிலை வகித்தார். 

ஹோப் ஹோம் - இல்லத்தில் இருந்தது வந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி மேடையை அலங்கரித்தனர். இந்நிகழ்ச்சியில் ஹோப் ஹோம் நிறுவனர் சரண்யா, ஆசிட் வீச்சில் இருந்து பிழைத்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும்  பாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்தது இந்த சமூகம் அனைவருக்குமான சமத்துவ சமூகம் என்பதை உறுதிப்படுத்தியது.

மேலும் படிக்க | தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News