பொல்லாதவன் பட பாணியில் ஆட்டோ திருட்டு! லாபகரமாக பிடித்த போலீஸ்!

200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஆட்டோ திருடர்களை சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 08:50 AM IST
  • இரவு வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே ஆட்டோவை நிறுத்தி விட்டு, மறு நாள் காலை பார்த்த போது ஆட்டோ இல்லை.
  • முதலில் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு அருகில் சிசிடிவி கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
பொல்லாதவன் பட பாணியில் ஆட்டோ திருட்டு! லாபகரமாக பிடித்த போலீஸ்!  title=

சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரம் பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் (42). இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு வழக்கம் போல் தனது வீட்டிற்கு வெளியே ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறு நாள் காலை வெளியே வந்து பார்த்த போது தனது ஆட்டோ இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன், நேராக திருவான்மியூர் காவல் நிலையத்தில் (Police Station) புகார் அளித்துள்ளார்.  புகாரின்படி வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து திருவான்மியூர் போலீசார் விசாரணையை துவக்கினர். 

ALSO READ | மூதாட்டி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

முதலில் ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் (CCTV Camera) பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அன்றிரவு அதே பகுதியை சேர்ந்த 62 வயதான முரளி என்பவர் ஹரிகிரிஷ்ணனின் ஆட்டோவை ஒட்டி செல்வதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து ஆட்டோ செல்லும் பாதை முழுவதிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அவ்வாறு சுமார் 200-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்ததில், ஹரிகிரிஷ்ணனின் ஆட்டோ முரளியிடமிருந்து சந்தோஷ், ஷாநவாஷ், குமார் என ஒவ்வொருவராக கைமாறி கடைசியாக எண்ணூரில் உள்ள ஜனார்த்தனன் என்பவரின் ஆட்டோ மெக்கானிக் கடைக்குள் சென்றுள்ளது.

தொடர்ந்து ஜனார்தனனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருடிய ஆட்டோவினை விற்பனை செய்வதற்காக அதன் அடையாளம் தெரியாத அளவிற்கு அக்குவேறு ஆணிவேராக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 
ஆட்டோவை திருடியவுடன் மளமளவென அதன் பதிவு எண், சேசிஸ் நம்பர், உரிமையாளர் விவரங்கள் முழுவதிலுமாக அகற்றப்பட்டு, ஆட்டோவை புதிதாக காட்டுவதற்காக டிங்கரிங் வேலைகள் நடைபெற்று வந்துள்ளது.

auot

பின்னர், இதில் தொடர்புடைய முரளி, சந்தோஷ், ஷாநவாஷ், குமார், ஜனார்த்தனன் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த திருட்டில் தொடர்புடைய சந்தோஷ், ஷாநவாஷ், குமார் ஆகியோர் ஆட்டோ ஓட்டுனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News