Crime: தாம்பரம் அருகே வனப்பகுதியில் பெண் எலும்பு கூட்டினை கண்டெடுத்த போலீசார்

தாம்பரம் அருகே வனப்பகுதியில் பெண் எழுப்பு கூட்டினை கண்டெடுத்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த எலும்பு கூடு, பெண் மதபோதகர் என்பது தெரியவந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2022, 09:11 PM IST
Crime: தாம்பரம் அருகே வனப்பகுதியில் பெண் எலும்பு கூட்டினை கண்டெடுத்த போலீசார்  title=

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று மாலை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆடு மேய்க்க சென்றபோது வனப்பகுதியில் மனித எலும்பு கூண்டு கிடப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற சேலையூர் போலீசார் பார்த்த போது, அந்த எமும்புக் கூடு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்பு கூடு என்பதும்  இறந்து ஒரு மாதம் காலம் ஆனதால் எலும்புகூடாக மாறியதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக எழும்புகூட்டை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க | மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை

இந்நிலையில் கடந்த மாதம் 8ஆம் தேதி அகரம் தென் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் எஸ்தர் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. அவரது மகள் ஏஞ்சலின் இது சம்பந்தமாக சேலையூர் போலீசில் புகார் அளித்தும் தெரியவந்ததை அடுத்து புகார் கொடுத்த ஏஞ்சலின் அழைத்து சென்று பிரேதத்தை காட்டியபோது இவர் தனது தாயார் தான் என அடையாளம் காட்டினார்

எலும்பு கூடாக கிடந்த எஸ்தர் மத போதனை செய்து வந்ததாகவும், கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டி சென்றவர் திரும்ப வரவில்லை என தெரியவந்தது.

மேலும் படிக்க | விளையாட்டு விபரீதமானது - தாயை பயமுறுத்த பிளேடை கழுத்தில் வைத்த மகன் பலி

இந்நிலையில் எட்டாம் தேதி காணாமல் போன எஸ்தர் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார், அவறை யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | திருட போன கடைக்கு கடிதம் போட்ட திருடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News