Edappadi Palanisamy: கள்ளச்சாராய விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்-இ.பி.எஸ் காட்டம்

கள்ளச்சாராயத்திற்கு 19பேர் பலியான சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்று தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : May 16, 2023, 05:13 PM IST
  • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • முதல்வர் ஸ்டாலின் நேற்று விழுப்புரத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறிதல் தெரிவித்தனர்.
  • எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராய விவகாரத்திற்கு முழு பொறுப்பை ஏற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
Edappadi Palanisamy: கள்ளச்சாராய விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்-இ.பி.எஸ் காட்டம் title=

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 19 பேர் பலியானது மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் சென்ற எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அவசர சிகிச்சை பிரிவில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் 42 பேரையும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுவை மாநில செயலாளர் அன்பழகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, சக்காபணி, அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்த்த பிறகு எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

மேலும் படிக்க | MK Stalin: டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயம்... எதனால் இத்தனை உயிரிழப்புகள் - முதல்வர் விளக்கம்

இரண்டு ஆண்டில் ஒன்றும் செய்யவில்லை..

தி.மு.க இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், “ ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அரசு, கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காரணத்தால் 18 உயிர்களை இழந்துள்ளோம் எனவும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாம்பூர் பகுதியில் ஐந்து பேர் இறந்துள்ளனர் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாகப்பன் அம்மாவாசை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 கண்காணிப்புக்குழு..

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராய விற்பனைகள் குறித்து ஏற்கனவே காவல் துறைக்கு தெரிந்துள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2000 பேரை போலீஸார் கைது செய்துள்ளது என்றும் அவர் கூறினார். 

“பதவி விலக வேண்டும்..”

“எளிய உழைப்பாளிகள் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து உள்ளனர்,
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் வியாபாரம் தடை இல்லாமல் நடைபெற்று வருகிறது, அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம். குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மது குடிப்பவர்களை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது,” என்று எடப்பாடி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். கள்ளச்சாராய விற்பனை குறித்து முன்னரே தெரிந்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். 

மேலும் படிக்க | Liquor Deaths: தமிழகத்தில் தலைதூக்கும் கள்ளச்சாராய விவகாரம்:பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News