புதிய கல்விக் கொள்கை... நோ சொன்ன அமைச்சர் - கோரிக்கை வைத்த ஆளுநர்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முன்வர வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 30, 2022, 04:59 PM IST
  • புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஆளுநர் கோரிக்கை
  • புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு
 புதிய கல்விக் கொள்கை... நோ சொன்ன அமைச்சர் - கோரிக்கை வைத்த ஆளுநர் title=

புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. ஆனால் அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ ஆட்சிக்கு வந்த பிறகு அதே நிலைப்பாட்டில் தொடர்கிறது.

Ponmudi

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு வாய்ப்பு இல்லை. விரைவில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அனைவரும் முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக விழாவில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்கள் மாநாட்டை சில நாள்களுக்கு முன்பு நடத்தினேன். அதில், பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. 

Ravi

நம்மிடம் தற்போதுள்ள கல்வி முறையைப் பற்றி நிச்சயம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுநாள்வரை நாம் தேசத்தை பார்த்த பார்வை சரியாக இல்லை என்று  சொல்ல வேண்டும். ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்விக் கொள்கையை அணுகியிருக்கிறோம்.

மேலும் படிக்க | கார்த்திக் கோபிநாத் கைது முதல் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டர் வரை.!

கடந்த பல ஆண்டுகளாக நாம் நம்மிடையே உள்ள பிரிவினைகளையே அதிகமாக பார்த்திருக்கிறோம். பல்வேறு வேறுபாடுகள், பிரிவினைக் கருத்துகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த அனைவரும் முன்வர வேணடும். திறந்தநிலை பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. 

புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை. படிப்பை பாதியில் கைவிட்டாலும் மீண்டும் தொடர அதில் வாய்ப்பு உள்ளது” என்றார்.

மேலும் படிக்க | உதயநிதிக்கு விரைவில் பட்டாபிஷேகம்... அன்பில் மகேஷ் போட்ட விதை... அறிவாலயத்தில் சலசலப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News