Chennai Weather Latest Update News: கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட பல்வேறு பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவதிப்பட்ட நிலையில், அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சொற்பமானவர்களுக்கே அது திருப்பி அளிக்கப்பட்டதாகவும் இன்றளவும் புகார்கள் உள்ளன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.
மறக்குமா நெஞ்சம்...!
ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கு முன் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், ஆக. 12ஆம் தேதி அன்று கனமழை பெய்ததன் காரணமாக நிகழ்ச்சி அன்று ரத்து செய்யப்பட்ட பின்னரே செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
செப்டம்பரில் நடந்த போது பார்வையாளர்களுக்கு புதிய நுழைவுச்சீட்டு கொடுக்கப்பட்டது. ஆனால், பழைய டிக்கெட்டுடனும் சிலர் வந்ததாலேயே அளவுக்கு அதிகமான கூட்டம் அன்று கூடியதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை ஆகஸ்ட் மாதமே நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால், செப்டம்பரில் அந்த நிலைமை வந்திருக்காது என்றே கூறப்பட்டது.
மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
4 ஆண்டுகளுக்கு பின்...
அன்றில் இருந்து சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாலே அனைவரும் பரபரப்பாகிவிடுவார்கள். அதன்பின் சென்னையில் பலரும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டனர். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மானின் கான்செர்ட் ஏற்படுத்திய பாதிப்பு அவ்வளவு சீக்கிரம் மக்களின் மனங்களில் இருந்து அகலாது எனலாம்.
இந்நிலையில், சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற இருக்கிறது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
மெட்ரோவில் இலவசம்
'இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரி' நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மியூசிக் மெட்ரோ மேஜிக்: இளையராஜாவின் இன்னிசை” கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம்
சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், நாளை 14.07.2024 “இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக…— Chennai Metro Rail (@cmrlofficial) July 13, 2024
அதாவது, நிகழ்ச்சிக்கு வருவதற்கும், போவதற்கும் என மொத்தம் 4 முறை அந்த டிக்கெட்டை வைத்தே மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கென வழங்கப்பட்ட பிரத்யேக டிக்கெட்டுகளில் இருக்கும் ஸ்கேனர்களை கொண்டு இந்த பயணத்தை நீங்கள் முன்னெடுக்கலாம். பெரும்பாலும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் குறையும் எனலாம்.
இசை மழையா...? கனமழையா...?
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இன்று காலையில் இருந்து நகரின் பல இடங்களில் மழை பெய்தும் வருகிறது. நிகழ்ச்சி நடைபெற உள்ள நந்தனத்திலும் மிதமான மழை பெய்து வருகிறது, மேக மூட்டத்துடன் காணப்படுவதால் இளையராஜாவின் இசை மழையில் நனைய காத்திருந்த ரசிகர்கள் பருவமழையால் தற்போது சோகமடைந்துள்ளனர். ஒருவேளை, தொடர்ந்து கனமழை பெய்தால் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நடந்தது போல், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுமோ என கவலையடைந்துள்ளனர்.
வெதர்மேன் கொடுத்த அப்டேட்
இதனால், இசை நிகழ்ச்சி நடைபெறும் போது மழை பெய்யுமா பெய்யாதா என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் ஒருவர் x பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர்,"கான்செர்டுக்கு ஏற்ற வானிலை நிலவும்" என பதிலளித்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.
A perfect weather for the concert. https://t.co/koigCxxsY4
— Tamil Nadu Weatherman (@praddy06) July 14, 2024
ஏனென்றால், இளையராஜா இதற்கடுத்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்பதால் இன்று குறுக்கிட்டு கான்செர்ட் ரத்தானால் அது எப்போது தள்ளிவைக்கப்படும் என்றே தெரியாது என வேதனை தெரிவிக்கின்றனர். செப்டம்பருக்கு பின் அடுத்த சில மாதங்களும் மழைக் காலம் என்பதால் ரசிகர்கள் இன்று மழை வரக்கூடாது என வருண பகவானை வேண்டி வருகின்றனர்.
மேலும் படிக்க | இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ