AR Rahman Markuma Nenjam Concert: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி இன்று மாலை முதல் நடைபெற்றது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த அவரின் இந்த இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்டு இன்றய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே ECR, OMR சாலை வெறிச்சோடி காணப்படும். வாகனங்கள் அதிகளவு செல்லாமல் வழக்கத்திற்கு மாறாக குறைந்து அளவில் தான் காணப்படும். ECR சாலையில் ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி இன்று நடைபெற்றதால், ECR சாலையில் தேவையற்ற வேலைகளுக்காக பயணிக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தனது சமூக வலைத்தளங்களில் ஒரு அறிவிப்பு எச்சரிக்கை அறிவித்திருந்தது.
போக்குவரத்து நெரிசல்
இசை நிகழ்ச்சி நடைபெறுவதால் இன்று ECR சாலையில் சென்ற வாகனங்களை OMR சாலை வழியாக திருப்பிவிடப்பட்டதால் ECR சாலை, சோழிங்கநல்லூரில் பல மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. வாகனங்கள் நகரக்கூட முடியாமல் சிலை போல் காட்சியளிக்கும் ஒரு சூழல் இங்கு நிலவியது. இந்த சாலையை பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனங்கள், கார், வேன், பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து நெரிசல் சிக்கி கடுமையாக அவதிக்குள்ளாகினர். இன்று மாலையில் இருந்து இந்த போக்குவரத்து நெரிசல் பல மணிநேரமாக நீடித்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினனர்.
மேலும் படிக்க | ‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!
சிரமத்திற்கு ஆளான பார்வையாளர்கள்
போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி ஏற்பாடுகள் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளும், புகார்களும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது. இதுவரை சென்னையில் நடைபெற்ற இசை கச்சேரிகளிலேயே மோசமான ஏற்பாடுகளை கொண்ட நிகழ்ச்சி இதுதான் என்றே பலரும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் ரூ. 50 ஆயிரம் வரை இந்த இசை நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விற்பனை நடைபெற்றது.
@arrahman just scammed crores in the name of the #marakumanenjam concert...
There was no space for the people in the venue...many of them were not allowed even with gold and diamond passes(5K)...many of us came out(they didn't allow that also)#ARRahman #ScamAlert pic.twitter.com/t7pAOBWQdb
— HACKER (@HACKER10370453) September 10, 2023
இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்கள் மதியம் 2 மணியளவிலேயே தங்கள் இருக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வயதான பெண்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆயிரக்கணக்கில் குவிந்தும் கதவை திறக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இது பலரையும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ARR concert was a shitshow & @arrahman is fully responsible. i saw one old lady faint in the afternoon, a lady faint on the way back & one girl getting her leg scratched & bleeding. right side speakers didn't work, the LED stopped working & nearly 1/3rd people leave the venue
— cranberrygin // new job era (@beef_parotttaa) September 10, 2023
மயங்கி விழுந்த பெண்
குறிப்பாக, இருக்கைக்கு அனுமதிக்கப்படாமல் உச்சி வெயிலில், கதவு திறப்பதற்காக காத்திருந்த வயதான பெண் ஒருவர் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கிருந்தோர் சோடா, சாக்லேட் போன்றவற்றை கொடுத்து அவரை தேற்றியதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மதியம் வெயிலில் ரசிகர்கள் வாடி வதங்கி போயுள்ளனர்.
@actcevents people of all ages have assembled since 2 to witness @arrahman perform and y'all don't even have the sense to open the gates on time.
below is a pic of an old lady who fainted while waiting on the queue. ARR, YOU ARE RESPONSIBLE!! pic.twitter.com/MRpiWMFCNf— cranberrygin // new job era (@beef_parotttaa) September 10, 2023
குறிப்பாக, இரண்டு மணிநேரம் தாமதாகவே இருக்கைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் தங்களின் குழந்தைகளை காணவில்லை என பல மணிநேரமாக தேடியதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு நெட்டிசன்கள் தங்களின் மோசமான அனுபவத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
பாலியல் அத்துமீறல்
இதுமட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் நடந்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,"கூட்டத்தை சாதகமாக வைத்து ஆண்கள் சிலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். நாங்கள் சுவாசிக்கக் கூட சிரமப்பட்டோம். மேலும் அவர்கள் பாலியல் ரீதியில் சீண்டப்பட்டோம்" என குறிப்பிட்டு, 'என்னுள் இருந்த ரசிகர் இன்று இறந்துவிட்டார், அதற்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளார்.
Exactly this. https://t.co/UEmLBgJv5r pic.twitter.com/NkAHehWfb9
— Paaru Kumudha Pathikum (@Edukudaa) September 10, 2023
அதில் ஒரு X பதிவர், "கோல்டன் டிக்கெட்டுகளுக்கு 2000 ரூபாய் செலுத்தி இந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள், இதைத்தான் நீங்கள் பெறுவீர்கள். என்ன ஒரு கேவலம். உள்ளே நுழையாமல் வீட்டுக்கு திரும்ப வேண்டியதாயிற்று" என அதன் வீடியோவை வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Imagine paying 2000 rupees for gold tickets and this is what you get? What a shit show. Had to return back without even entering. #ARRConcert #marakumanenjam pic.twitter.com/r8c64JLOuP
— Uncle Fed (@WhatTheFahad) September 10, 2023
மோசமான அனுபவம்
இதுகுறித்து நிகழ்வில் பங்கேற்ற நவீன் என்பவர் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தாவது,"மிக மிக மோசமான அனுபவமாக இருந்தது. முறையாக இருக்கைகள் வழங்கப்படவில்லை. அதிக பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தும் சரியான இடத்தில் அமரவைக்கப்படவில்லை, கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை. பாடல்கள் சுத்தமாக கேட்கவே இல்லை. மக்கள் கொத்து கொத்தாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். மிக மோசமான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
@actcevents @arrahman and everybody else involved in #marakumanenjam and #ARRahman live. We need answers, accountability, refunds and much more. The organizing today was pathetic, and not only from an experience POV but dangers to health&safety. Videos attached, thread follows. pic.twitter.com/hf7fnyDVHc
— Nitin (@makhayanitini) September 10, 2023
உயிருக்கே ஆபத்து
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கற்ற நிதின் என்ற X பதிவர்,"ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இந்த இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், பொறுப்பாளர்கள் கவனத்திற்கு... எங்களுக்கு பதில் சொல்லுங்கள், இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள், எங்கள் பணத்தைத் திரும்பத் தாருங்கள். இன்றைய ஏற்பாடு என்பது மிகவும் மோசமானதாக இருந்தது. எங்கள் நிகழ்ச்சி சார்ந்த அனுபவத்தை மட்டும் குறிப்பிடவில்லை, எங்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டது" என குறிப்பிட்டு பல்வேறு வீடியோக்களையும், பல்வேறு பதிவுகளையும் பதிவேற்றியுள்ளார்.
— actual spy kid (@spypotate) September 10, 2023
'கார்ப்பரேட் பேராசை மிக்கது'
மற்றொரு பதிவர்,"நிகழ்ச்சி திட்டமிடல், கூட்டத்தை நிர்வகித்தல், டிக்கெட் மேலாண்மை, குறைவான பணியாளர்கள், பார்க்கிங் இல்லாமை மற்றும் கடுமையான நெரிசல்கள் என அனைத்தும் ஆபத்தான அனுபவத்தை வழங்கியது. கார்ப்பரேட் பேராசை மிக்கது" என பதிவிட்டுள்ளார். இத்தகைய புகார்கள் எழுந்துள்ளதால் இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் ஏதும் விளக்கம் தருவாரா, பதில் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | நடு ரோட்டில் படுத்து போராட்டம் செய்த பிரபல நடிகர்..! காரணம் என்ன..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ