அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2022, 01:55 PM IST
  • கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் ஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை.
  • 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றசாட்டு.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! title=

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2011, 2016 ஆகிய 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக சார்பில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர்.  இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக கே‌.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் உள்ள வீடு, அலுவலகம்  அவருக்கு நெருங்கிய நண்பரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான மயில்சுதந்திரம், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், நல்லிபாளையம் விஜி, கேபிள் டிவி உரிமையாளர் லோகேஷ்வரன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 24 இடங்களிலும் மதுரை மற்றும் திருப்பூர் என தலா ஒரு‌ இடத்திலும் என மொத்தம் 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 8 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | போலி கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் மூலம் நூதன பண மோசடி! ஊர்காவல் படை வீரர் கைது

மேலும் ராசிபுரம் அடுத்த வெங்காயபாளையத்தில் KPP பாஸ்கரின் உறவினரான (மைத்துனர்) சோமசுந்தரம் என்பவரது வீட்டில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பாஸ்கரின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.  இந்நிலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கருக்கு ஆதரவாக அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, பரமத்திவேலூர் எம்.எல்.ஏ சேகர் மற்றும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

kpp

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆவணங்களை தீ வைத்து கொழுத்திய நபர் கைது

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News