Jaffer Sadiq: ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் செய்கிறதா NCB - ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் கேள்வி

Jaffer Sadiq: போதைப் பொருள் கடத்தல் தொடர்பான Jaffer Sadiq விவகாரத்தில் NCB அரசியல் செய்கிறதா? என்ற கேள்வியை புள்ளிவிவரங்களுடன் ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எழுப்பியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2024, 02:20 PM IST
  • ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் உள்ளதா?
  • ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எழுப்பிய கேள்விகள்
  • ஜாபர் சாதிக் தலைமறைவு தகவல் உண்மையா?
Jaffer Sadiq: ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் செய்கிறதா NCB - ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் கேள்வி title=

இது குறித்து ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் எக்ஸ் தளத்தில் எழுதியிருக்கும் பதிவில், “டெல்லியில் நடந்த போதைப்பொருள் பறிமுதல் விவகாரத்தில் என்ன நடக்கிறது?. Jaffer sadiq-க்கிற்கு 23-02-24 அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) -ன் டெல்லி மண்டல அலுவலகம் சம்மன் வழங்குகிறது. அவரை 26-02-24 அன்று ஆஜராக சொல்லி உத்தரவிடுகிறது. ஜாபர் சாதிக் ஆஜராகாத காரணத்தால் 28/02/24 அன்று Jaffer Sadiq-ன் வீடு பூட்டி சீல் வைக்கப்படுகிறது. அடுத்த தினம் வங்கிக்கணக்குகள் முடக்கப்படுகிறது.

அடுத்த தினம், Jaffer Sadiq கென்யா சென்றதாக தகவலை NCB வெளியிடுகிறது. அடுத்த சில தினங்களில் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் Narcotics Control Bureau ராணுவ ஒழுங்குடன் கட்டமைக்கப்பட்ட ரீதியில் Jaffer Sadiq விவகாரத்தை கையாண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை கசியவிட்டு இந்த விவகாரத்தை தொடர் பேசு பொருளாக வைத்திருக்க வேண்டுமென்பதில் NCB மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: இதற்காகத்தான் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லையா?

உண்மை என்னவெனில், 15/02/24 ம் தேதி West Delhi-ல் Pseudoephedrine 50 கிலோ 70 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு,3 நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். NCB 23/02/24 அன்று Jaffer Sadiq க்கிற்கு சம்மன் வழங்குகிறது. ஆனால், 21/02/2024 அன்று சென்னையில் நடந்த மங்கை திரைட்டத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் பங்கேற்றுள்ளார். ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட 15/02/24 -தேதியில் இருந்தே Jaffer Sadiq தலைமறைவாகி விட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் DDG, Gyaneshwar Singh IPS பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

Jaffer sadiq விவகாரத்தை அரசியல் ரீதியான பிரச்சனையாக கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டு அந்த Narrative-ஐ பிரமாதமாக செய்து வருகிறார்கள். NCB-ன் Deputy Director General ஆக இருக்கும் Gyaneshwar Singh IPS, Jaffer sadiq-ஐ 09/03/24 அன்று கைது செய்து விட்டதாக கூறி டெல்லியில் கொடுத்துள்ள பேட்டி முழுக்க அரசியல் ரீதியிலானது. அதாவது, NCB ஆல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு தேடப்பட்டு வந்த நபர் டெல்லியிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 

எங்கே எப்படி கைது செய்யப்பட்டார்..?, எங்கு இத்தனை நாட்களாக பதுங்கி இருந்தார் ?, யார் Jaffer Sadiq-கிற்கு அடைக்கலம் கொடுத்தது போன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. தெரியப்படுத்தவும் மாட்டார்கள். Jaffer Sadiq 09/03/24 அன்று தான் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக NCB-ன் Deputy Director General ஆக இருக்கும் Gyaneshwar Singh IPS கூறுவது உண்மையான தகவலாக இருக்க வாய்ப்பில்லை. அதெப்படி அய்யா? எந்த மாநிலத்தில் FIR பதிவு செய்யப்பட்டதோ அதே டெல்லியில் கைது நடக்கிறது?. அதுவும் கைது செய்யப்பட்ட அன்றே விசாரணை முடிவடையாத நிலையிலேயே எக்கசக்கமான விபரங்களை பத்திரிக்கை செய்தியாக Gyaneshwar Singh IPS வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பு NCB அதிகாரிகள் இப்படியெல்லாம் விரிவான பேட்டியை கைது நடந்த அன்றே தெரியப்படுத்தியதில்லை.

அதாவது, கைது செய்யப்பட்ட நபரை சட்டப்படி கஸ்டடி எடுப்பதற்கு முன்பே அனைத்தையும் Gyaneshwar Singh IPS, DDG-NCB கூறுகிறார். புலனாய்வு ஏஜென்சியின் வழக்கமான நெறிமுறைகளுக்கு மாறாக Jaffer Sadiq, எந்த கட்சியைச் சேர்ந்தவர், என்ன பொறுப்பி்ல் இருந்தார் என்ற விபரங்களை கூறியது அப்பட்டமான அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். அதோடு, போதை மருந்து விற்பனை மூலமாக கிடைத்த பணத்தைக்கொண்டே மங்கை திரைப்படம் எடுக்கப்படுள்ளதாக தெளிவாக கூறுகிறார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் Press meet-ல் இப்படி தீர்மானிக்கப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் வினோதமாக இருக்கிறது. 

NCB-ன் Deputy Director General ஆக இருக்கும் Gyaneshwar Singh IPS செய்தியாளர் சந்திப்பில் கூறியது உண்மை என்றால், Jaffer Sadiq நிச்சயம் 09/03/24 அன்று கைது செய்யப்படிருக்க வாய்ப்பில்லை. முன்கூட்டியே Jaffer Sadiq-ஐ கைது செய்து illegal Custody மூலமாக விசாரித்து, என்னென்ன பேச வேண்டும் என Plan செய்து NCB-ன் Deputy Director General ஆக இருக்கும் Gyaneshwar Singh IPS செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக மிக நேர்த்தியான  நாடகத்தை NCB மூலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

2013 -ல் 20 கிராம் Pseudoephedrine வைத்திருந்தாக கைது செய்யப்பட்ட வழக்கில் Jaffer Sadiq-கிற்கு வழக்கறிஞராக ஆஜராகி விடுதலை வாங்கிக்கொடுத்தவர் தமிழ்நாடு பிஜேபியின் துணைத்தலைவர் பால் கனகராஜ். Jaffer Sadiq -கிற்கு இங்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால்,சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக இருக்கும் NCB நடவடிக்கைகள், அரசியல் ரீதியான உள்நோக்கத்துடன் இருப்பது மிக வெளிப்படையாக தெரிகிறது. தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டை போதைப்பொருள் Hub-ஆக சித்திரிக்க பகிரங்கமாக முயற்சிக்கிறார்கள். அதற்கு NCB-ன் DDG  Gyaneshwar Singh IPS உதவி செய்கிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News