துரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம்

மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகும் கூட கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த காரணங்களால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2021, 07:34 AM IST
  • தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தீவிர மாற்றங்கள்.
  • தோல்விக்குப் பிறகும் கமல்ஹாசன் மாறவில்லை - மகந்திரன்.
  • மகேந்திரன் ஒரு துரோகி - கமல்ஹாசன்.
துரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம் title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் இம்முறை பல கட்சிகள் புதிதாக களம் கண்டன. கமல்ஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் மக்கள் கவனத்தை ஈர்த்த சில கட்சிகளில் ஒன்றாகும்.

எனினும், இந்த கட்சியால் சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மட்டும், தன்னுடன் போட்டியிட்ட பிற வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை கொடுத்து சில வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தினார்.  தோல்விக்குப் பிறகு முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் தேர்தல் பணி, வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் ம.நீ.ம கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்த சுரேஷ் அய்யர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  

இந்த சந்திப்பில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் (MNM) இருந்து துணைத் தலைவர் மகேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோரும் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்துள்ளனர். 

ALSO READ: கட்சியில் கடுமையான மாற்றங்கள் இருக்கும்: கட்சி நிர்வாகிகளை எச்சரித்தார் கமல்ஹாசன்

இதன் பிறகு, மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் தேர்தலில் பெற்ற தோல்விக்குப் பிறகும் கூட கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த காரணங்களால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

image

கமல்ஹாசனைப் பற்றி மகேந்திரன் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே கமல்ஹாசன் தரப்பிலிருந்தும் தற்கு ஏற்ற ஒரு பதில் பறிக்கை வெளியாகியது. அந்த அறிக்கையில், அந்த அறிக்கையில், பெரிய கனவுகளோடு கட்சி தேர்தல் களத்தில் (TN Election) இறங்கியது என்றும், களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கட்சி கண்கூடாகக் கண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. துரோகிகளை களையெடுக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது என்றும் அதில் முதலாவதாக களைய வேண்டியவர் தான் டாக்டர் ஆர்.மகேந்திரன் என்றும் அறிக்கையில் காட்டம் காட்டியுள்ளது மக்கள் நீதி மய்யம் தார்ப்பு. 

'மகேந்திரனுக்கு தன்னை எப்படியும் கட்சி நீக்கிவிடும் என்பது தெரியும். ஆகையால் அவரே முதலில் விலகிவிட்டார். தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக் கொண்டு ஓடும் கோழைகளை ஒருபோதும் நாம் பொருட்படுத்தியதில்லை' என்றும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். 

மகேந்திரம் மட்டுமல்லாது, இன்னும் பல உறுப்பினர்களும் ராஜினாமா செய்து வரும் நிலையில், சிலரை கட்சியே விலக்கி வருகிறது. 

ALSO READ: கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் உடைகிறது, ராஜினாமாக்கள் தொடர்கின்றன

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News