கும்பகோணத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி!

கும்பகோணத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் அளவிற்கு மோசடி செய்த சீட்டு மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் கைது.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2023, 08:58 AM IST
  • கும்பகோணத்தில் பணம் பெற்று மோசடி.
  • அதிக வட்டி தருவதாக மோசடி.
  • போலீசார் தீவிர விசாரணை.
கும்பகோணத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி! title=

கும்பகோணத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஸ்கண்ணா, மற்றும் நிதி நிறுவன வேளாளர்  நரேந்திரன் கைது. மோசடி செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் விசாரணை.  கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ்வரியம் என்ற பெயரில் சீட்டு நிறுவனத்தை ராஜேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்தார்.   இந்நிறுவனத்தில் மேலாளராக நரேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.  இவர்கள் மாதாந்திர சீட்டு மற்றும் நிரந்தர வைப்பு நிதி பெற்று வந்தனர்.  நிரந்தர வைப்பு நிதியாக ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 4000 ரூபாய் வட்டியாக தருவதாக கூறியிருந்தனர். பலர் இதில் முதலீடும் செய்திருந்தனர்.

மேலும் படிக்க | "அவன் மாட்டிக்கிட்டான்" அமைச்சர் செந்தில் பாலாஜியை திட்டி தீர்த்த டாஸ்மாக் ஊழியர்

 200க்கும் மேற்பட்டோர் கும்பகோணத்தில் மாதாந்திர சீட்டும் கட்டியிருந்தனர். சீட்டுக்கான காலக் கெடு முடிவுற்ற போதிலும் பலருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  கும்பகோணத்தில் இயங்கி வந்த ஐஸ்வர்யம் சீட்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்டுள்ளது. இங்கு முதலீடு செய்தவர்கள் இந்நிறுவன உரிமையாளர் திருச்சியில் உள்ள ராஜேஷ் கண்ணாவை பலமுறை நேரில் சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர்.  பலருக்கு ராஜேஸ்கண்ணா செக் கொடுத்துள்ளார். கொடுத்த செக்குகள் அனைத்தும் கணக்கில் பணம் இல்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்து அதனை திருப்பிக் கொடுத்துள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 40 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த 40 நபர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடியில் செய்யப்பட்ட தொகை சுமார் 50 லட்சம் ரூபாய் க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ் குமார்  தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு திருச்சியில் இருந்த இந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மன்னார்குடியில் இருந்த கும்பகோணம் கிளை மேலாளர் நரேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா மற்றும் நரேந்திரன் ஆகியோரை இன்று மாலை நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்,  ஐஸ்வர்யம் சீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருச்சியிலும், கிளை அலுவலகம் திருவரம்பூரிலும் இயங்கிவருகிறது , தஞ்சாவூர், மன்னார்குடி மற்றும் கோவையில் இயங்கிய கிளைகள் ஏற்கனவே மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் நடந்த மோசடி குறித்து புகார் பெறப்பட்ட அடிப்படையில் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. மற்ற ஊர்களில் செயல்பட்ட கிளை அலுவலகங்களில்  இதுபோல் மோசடி நடைபெற்றுள்ளதா? என்பது போக , போக தெரியவரும்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது பாஜக அரசு...? - அமித்ஷாவுக்கு ஓபன் சவால் விட்ட ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News