Chennai Oxygen Messiahs: இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ சேவை

ஆட்டோவில் மருத்துவ ஆக்ஸிஜனை பொருத்தியுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, சென்னை வீடுகளுக்கு சென்று இலவசமாக ஆக்சிஜன் சேவையை வழங்குகிறது. மருத்துமனைகளுக்கு மக்களை இலவசமாக அழைத்துச் செல்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 21, 2021, 12:10 PM IST
  • இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ சேவை
  • கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை 24/7 சென்னை நகரில் சேவை செய்கிறது
  • ரத்த ஆக்ஸிஜன் செறிவு அளவில் ஏற்படும் மாறுபாடுகள் சிக்கலை அதிகப்படுத்துகின்றன
Chennai Oxygen Messiahs: இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ சேவை title=

சென்னை: COVID-19  தொற்றுநோயானாது, மருத்துவ உள்கட்டமைப்பு சிக்கல்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. படுக்கைகள் பற்றாக்குறை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாதது என மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகளால் நோயாளிகளின் மன உறுதி குலைகிறது. வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களும், அவர்களது குடும்பத்தினரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.  

அதிலும், நோயாளிகளுக்கு Sp02 (இரத்த ஆக்ஸிஜன் செறிவு) அளவில் ஏற்படும் மாறுபாடுகள் சிக்கலை அதிகப்படுத்துகின்றன. ஆக்ஸிஜனுக்காக அல்லாடும் நிலையும் இருக்கிறது.

Also Read | Covid-19 Update: 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேருக்கு கொரோனா

நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தாலும்,  ஆம்புலன்ஸ் கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் உயிருக்கே உலை வைக்கிறது.

இந்த நிலையில் கொரோனா அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆபத்பாந்தவனாய் களம் இறங்கியிருக்கிறது கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை (Kadamai Education and Social welfare trust) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்.

ஆட்டோவில் மருத்துவ ஆக்ஸிஜனை பொருத்தியுள்ள தொண்டு நிறுவனம், மருத்துமனைகளுக்கு மக்களை இலவசமாக அழைத்துச் செல்கிறது.

Also Read | ஜூன் மாதம் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு
 
இந்தப்பணியில் நான்கு ஆட்டோக்களைப் பயன்படுத்தும் கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, கடந்த மூன்று வாரங்களில் 24/7 மணி நேரமும் சென்னை நகரம் முழுவதும் சேவைகளை வழங்குகிறது.

ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆக்சிஜன் கொடுக்கிறார்கள். இந்த ஆட்டோக்களில் 50 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது

ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் பிபிஇ கிட் அணிந்து, பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பபடுகளையும் கடைபிடிக்கின்றனர்.

தினசரி சுமார் 400 தொலைபேசி அழைப்புகள் வருவதாக கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை கூறுகிறது.

Also Read | Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News