தமிழகத்தின் பல இடங்களில்... மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு..!

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 1, 2024, 02:04 PM IST
  • தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.
  • கோவையின் மே தினத்தில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  • மே தினத்தை முன்னிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, தண்ணீர் பழம், நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல இடங்களில்... மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு..! title=

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. நெரோலாக் தொழிற்சங்கம் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த தொழிலாளர் பேரணியில் அசோக் லேலண்ட், பாரா கோட்,  உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

ஓசூரில் மே தின பேரணி

ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணியானது, ஏரி தெரு மகாத்மா காந்தி சாலை பழைய பெங்களூர் சாலை வழியாக சென்று ராம்நகர் அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது.  தொழிலாளர்களுக்காக போராடி உயிர் நீத்த உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் உள்ளிட்டவைகளின் கையில் ஏந்தியப்படியே, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் முழக்கங்களை கையில் ஏந்தியவாறு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். இதைத்தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களில் பிரதிநிதிகளும் பங்கேற்று மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மே தின பேரணி

பழனியிலும் மே தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி 
நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் நீதிமன்ற வளாக முன்பு இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை பழனி காவல்துணைக் கண்காணிப்பாளர் தன ஜெயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பழனி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. பின்னர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை மற்றும் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்... ஷாக் ஆன இளைஞர் - பரபரப்பு பேட்டி!

கோவையின் மே தினத்தில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக பல்வேறு அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை அமைத்து வருகின்றனர்.இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு, நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில்  நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, தண்ணீர் பழம், நீர் மோர் உள்ளிட்டவையினை காவல் ஆய்வாளர், பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் வழங்கி தாகத்தை தீர்த்தனர்.இதற்கான துவக்க விழாவில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,,மாமன்ற உறுப்பினர் முபஷீரா,உக்கடம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கம், பொதுமக்களுக்கும், தண்ணீர் பாட்டில், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் நீர் மோர் சொல்லிட்டவனை வழங்கி வெயிலின் தாகத்தை தீர்த்தனர்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News