Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைப்பொழிவும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2021, 09:14 AM IST
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை
  • வானிலை மையம் முன்னெச்சரிக்கை
  • 9 நாட்களாக தமிழகத்தில் மழை
Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை  title=

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைப்பொழிவும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் (29.10.21 முதல் 06.11.21 வரை) புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

06.11.21 முதல் 07.11.21 காலை 07:30 மணி வரை மழைப்பொழிவு பதிவான விவரங்கள்:
சென்னை – 207.0
எண்ணூர் துறைமுகம் -AWS (சென்னை மாவட்டம்): 80.0
மீனம்பாக்கம்-இஸ்ரோ : 92.0
எம்ஆர்சி நகர் -ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்) 156.5
ஒய்எம்சிஏ நந்தனம் -ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்): 150.0
அண்ணா பல்கலைக்கழகம்-ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்): 141.0
தரமணி -ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்) – 118.0

Read Also | 'டிக்டாக்' சுகந்தி கைது! சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!
மேற்கு தாம்பரம்-எஸ்ஐடி (செங்கலப்பட்டு மாவட்டம்) - 46.5
நல்லெண்ண பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்): 191.0
புழல் (திருவள்ளூர் மாவட்டம்): 130.0
திரூர்-கேவிகே (திருவள்ளூர் மாவட்டம்): 42.0
வம்பன்-கேவிகே (புதுக்கோட்டை மாவட்டம்) – 62.0
சிறுகமணி-கேவிகே (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) –123.5
துவாக்குடி-இஸ்ரோ (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) - 29.0
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி -ஏஆர்ஜி (காஞ்சிபுரம் மாவட்டம்): 96.5
அருப்போக்கோட்டை-கேவிகே (விருதுநகர் மாவட்டம்): 25.0
அதிராமபட்டினம்: 33.0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தீவிர வெப்பச்சலனம் ஏற்படும் வாய்ப்புகள் தென்படுகின்றன. மேலும், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டங்கள்; புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால், நீர் தேங்கும் அபாயமும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பும், சாலைகளில் அடைப்பும் ஏற்படலாம். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது, சில இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்துள்ளது, கனமழையால் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை முன்கணிப்பின் அடிப்படையில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Also Read | விஜய்சேதுபதியை தாக்கிய காரணம்! உண்மையை உடைத்த காந்தி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News