'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சமூக வலைதளங்களில் டிக்டாக் சுகந்தி பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு,சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டது.

Last Updated : Nov 6, 2021, 07:14 PM IST
  • திவ்யாவும் இவருக்கும் சளைத்தவர் இல்லை. இருவருக்கும் நடக்கும் சண்டை அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.
  • சில நாட்களுக்கு முன்னர் பலரை பற்றி அவதூறு பரப்புவதாக டிக்டாக் திவ்யாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு! title=

தேனி: தேனி மாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி.இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர். மேலும் இவருக்கு திருமணமாகி 1 குழந்தை உள்ளது.இவரது கணவர் ராணுவ வீரர்,ஆனால் தற்போது இவர் கணவருடன் இல்லை.'டிக்டாக் சுகந்தி' என்றால் தெரியாதவர் யாருமில்லை.ஏனெனில் இவரது வீடியோக்கள் அந்த அளவிற்கு இருக்கும்.

இவர் அதிகமாக கண்களை கூசும் அளவிலான வீடியோக்களை தான் பதிவிடுவார். இவரது வீடியோவிற்கு வரும் கமெண்டுகளை பார்த்து புது புது வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.அந்த அளவிற்கு அனைவரும் இவரை கழுவி ஊற்றுவார்கள். ஒருபக்கம் இவரை வசைபாடினாலும்,மறுபக்கம் இவரை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள் ஏராளம். அதனைத்தொடர்ந்து,அடிக்கடி பலருடன் சமூக வலைதளத்தில் சண்டையிட்டு வார்த்தைகளால் விலாசுவார்.ஏற்கனவே இவருக்கும் தஞ்சையை சேர்ந்த டிக்டாக் திவ்யாவுக்கும் தான் சண்டை களைகட்டியது. அந்த திவ்யாவும் இவருக்கும் சளைத்தவர் இல்லை. இருவருக்கும் நடக்கும் சண்டை அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.

tiktok

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பலரை பற்றி அவதூறு பரப்புவதாக டிக்டாக் திவ்யாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து தற்போது சுகந்தி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  அதாவது மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சமூக வலைதளங்களில் டிக்டாக் சுகந்தி பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு,சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் பல பிரிவுகளில் சுகந்தி முது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த சுகந்தி தலைமறைவானார். கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் டிக்டாக் சுகந்தியை வலைவீசி தேடி வந்தனர். 
 
ஒருவழியாக இன்று போலீசார் டிக்டாக் சுகந்தியை கைது செய்துள்ளனர்.மேலும் சுகந்தி மீது பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், விசாரணைக்கு பிறகு மதுரை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் அவரை ஒப்படைக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.இந்த இன்பச் செய்தியினை கேட்ட பலரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News