ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி... மேல்முறையீடு செய்க - சீமான் ஐடியா

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 23, 2022, 08:24 PM IST
  • தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி
  • பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்
  • உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சீமான் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி... மேல்முறையீடு செய்க - சீமான் ஐடியா title=

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி  உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சியான திமுகவையும் பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல!

 

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.

மேலும் படிக்க | எஸ்டிபிஐயை நசுக்குவதில் பாஜகவுக்கு கூடுதல் கவனம் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஸ்விக்கி, சொமேட்டோ தொழிலாளர்களுக்கு தனி சட்டம் இயற்றுங்கள் - சீமான் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News