ஒடிசாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது சிறப்பு ரயில்: மற்றொரு சிறப்பு ரயில் குறித்த விவரம் இதோ

ஒடிசாவில் கோர ரயில் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவார்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2023, 02:30 PM IST
  • சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு ரயில்
  • நாளை காலை வந்து சேருகிறது
  • தயார் நிலையில் மருத்துவ உதவிகள்
 ஒடிசாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது சிறப்பு ரயில்: மற்றொரு சிறப்பு ரயில் குறித்த விவரம் இதோ title=

ஒடிசாவில் நாட்டையே உலுக்கும் அளவுக்கான மிகப்பெரிய கோர ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இன்னும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக ஒடிசா மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய விபத்தில் சிக்கிய பயணிகளின் விபரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ரயில் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Train Accidents: ஒடிசா சம்பவத்தை போல் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்!

இதனிடையே விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் தப்பித்தவர்கள், காயமின்றி பிழைத்தவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தால் ஒடிசாவில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்கள் ஒடிசா செல்லவும் சிறப்பு ரயில்கள் ரயில்வே துறையுடன் இணைந்து தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதனையொட்டி, விபத்தில் தப்பியவர்கள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புவனேஷ்வரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறப்பு ரயில் காலை 8.45 மணிக்கு புறப்பட்டுவிட்டது. நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் வந்து சேரும்.

காயத்துடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு புறப்பட்டுள்ள சிறப்பு ரயிலில் மொத்தம் 250 பயணிகள் இருக்கின்றனர். அவர்கள் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா வழியாக சென்னை வருகின்றனர். அதேபோல், மறுமார்க்கமாக ஒடிசா செல்ல இருப்பவர்களுக்கு இன்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் இதில் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் 044-25330952, 044-25330953 மற்றும் 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஒடிசாவில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

மேலும் படிக்க | Squid Game: விளையாட்டு தெரியாமலேயே ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்ற தமிழர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News