Tamil Nadu budget 2022-23: ஆறுதல் பாதி... ஏமாற்றம் மீதி... இரண்டும் கலந்த பட்ஜெட்...

தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான பின்னூட்டங்கள்... தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட்  "ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என கமல் ஹாசன் கருத்து...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2022, 10:33 AM IST
  • ஆறுதல் பாதி... ஏமாற்றம் மீதி... இரண்டும் கலந்த பட்ஜெட்...
  • தமிழக பட்ஜெட்டின் குறைகளை பட்டியலிடும் மக்கள் நீதி மய்யம்
  • பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதிக்கு பாராட்டு
Tamil Nadu budget 2022-23: ஆறுதல் பாதி... ஏமாற்றம் மீதி... இரண்டும் கலந்த பட்ஜெட்... title=

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் நேற்று  தாக்கல்செய்தார். 

திமுக அரசின் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பலர் தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு வரவேற்பு கொடுத்தால், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிலர் விமர்சனங்களால, ஆக்கத்தையும், தாக்கத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர். அதில் ஒருவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட்  "ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என்று மக்கள் நீதி மய்யத்தின் கமல ஹாசன் பட்ஜெட் பற்றிய தனது கருத்துக்களை சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் தகவல்களை உடனுக்குன் தெரிந்துக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தம்திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை என்று தனது ஆதங்கத்தை கமலஹாசன் வெளிப்படுத்தியுள்ளார். 

குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்ன மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். ஆனால், அறிவித்த திட்டம் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 நேரலையில் காண இங்கே கிளிக் செய்யவும்

எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பு தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம் அதிகரித்துள்ளது என்று மக்கள் நீதி மய்யத்தின் கவலையை கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயமானதாகவே இருக்கும் என்று குட்டு வைக்கும் கமலஹாசன், சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும் என்று தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | TN Agri Budget 2022-23: தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட் பின்னணி

மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News