சென்னை: 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதனை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது என்பதை நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, இன்று பட்ஜெட் தாக்கல் ஆரம்பிக்கும்போதே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரைடு குறித்து பேச அனுமதி வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்
எதிர்கட்சி சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி மறுத்தார்.
உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்ட சபாநாயகர், பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறைகளை அறிந்த அதிமுகவின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் இருக்கும் அவையில் இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என்று திரும்பத் திரும்ப சொன்னார்.
மேலும், பட்ஜெட் தாக்கலின் போது, வேறு எந்த விவகாரமும் பேச அனுமதி கிடையாது என்ற நடைமுறை முன்னாள் முதலமைச்சர்களுக்குத் தெரியாதா என்று சபாநாயகர்
ஆனால், அதிமுகவின் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே வெளிநடப்பு செய்தனர்.
மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்
கடந்த 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்து என்றும், 2021ஆம் ஆண்டு அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தகக்து.
மேலும், தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்திருந்ததையும், அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது என்பதையும் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்திருந்தார்.
எனவே, 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதனை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது என்பது மாநிலத்திற்கு சாதகமான விஷயமாக இருக்கும்.
தமிழக பட்ஜெட்டை நேரலையில் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR