TN Agriculture Budget 2022 Live Updates: வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தார் வேளாண் அமைச்சர்

TN Budget 2022-23 Live​: தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 11:48 AM IST
Live Blog

தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2வது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

 

19 March, 2022

  • 11:45 AM

    1மணி நேரம் 46 நிமிடங்களில் பட்ஜெட் உரையை வாசித்து முடிந்தார் அமைச்சர்

  • 11:45 AM

    மகளிர் சுய உதவி குழு சுய தொழில் தொடங்க மூல தன உதவி வழங்கப்படும்

  • 11:45 AM

    22 லட்சத்துக்கு மேற்பட்ட மின் மோட்டர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்ப்ட்டு வரும் நிலையில் புதிய மின்சார இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இலவச மின்சாரத்துக்கு 5157 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்கிறது.

  • 11:30 AM

    வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ₹16 கோடி நிதி ஒதுக்கீடு

  • 11:30 AM

    வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.

  • 11:30 AM

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு,

  • 11:30 AM

    சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.

  • 11:30 AM

    கால்நடை பராமரிப்பு

    தீவன பற்றாக்குறை போக்க ஒருங்கிணைந்த பசும் தீவன உற்பத்தி திட்டம் துவங்கப்படும்

  • 11:30 AM

    விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை

  • 11:30 AM

    கேரள தோட்டக்கலை தமிழகத்தில் நேரடி கொள்முதல் செய்யும் வகையில் தேனி, கோவையில் மொத்த காய்கனி மையம் அமைக்கப்படும்

  • 11:15 AM

    100 இடங்களில் அச்சு வெல்ல தயாரிப்பு மையம் அமைக்க 1கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    வேளாண் உற்பத்தி சார்ந்த சேவைகள் கணிணி மயமாக்கப்படும்

  • 11:15 AM

    50 உழவர் சந்தைகள் சீரமைக்க 15கோடி ஒதுக்கீடு

  • 11:15 AM

    பம்பு செட்களை இயக்கும்போது ஏற்படும் பாம்பு கடிகளை தடுக்க கைப்பேசியின் மூலம் இயக்கும் கருவிகள் அதிகபட்சம் 50,000 ரூபாயில் வழங்க நடவடிக்கை.

  • 11:00 AM

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு 5157 கோடி வழங்கப்படும்

  • 11:00 AM

    5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டர் வாங்க ஒரு மோட்டருக்கு 10,000 மானியம் வழங்கப்படும்

  • 11:00 AM

    292 மதிப்பு கூட்டு இயந்திரங்கள் 50%மானியத்தில் 5கோடி மதிப்பில் வழங்கப்படும்

  • 11:00 AM

    சூரிய சக்தியால் இயங்கும் 3000 பம்பு செட்கள் 70% மானியத்தில் வழங்கப்படும்

  • 11:00 AM

    விவசாய கருவிகள் வாடகைக்கு வழங்கி பெண் விவசாயிகள் ஊக்குவிக்கப்படும்

  • 11:00 AM

    சிறந்த பனை ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது

  • 11:00 AM

    தமிழ்நாட்டின் மாநில மரமான பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க பனை வெல்லம், பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படும்.

    10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.

  • 11:00 AM

    அரசு மாணவ மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை செடிகள் கொண்ட தோட்டம் தொடங்கப்படும்.

    விடுதி ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம் 20 லட்ச ரூபாயில் திட்டம் தொடக்கம்

  • 10:45 AM

    இஞ்சி, மஞ்சள் தேவையை பூர்த்தி செய்ய 3கோடி நிதியில் திட்டம்

  • 10:45 AM

    வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ளும் செயலி உருவாக்கப்படும் - வேளாண்மைத்துறை அமைச்சர்

  • 10:45 AM

    மருத்துவக் குணம் நிறைந்த பூண்டு சாகுபடி விரிவுபடுத்தப்படும்

  • 10:45 AM

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெற 8 கோடி ரூபாய் மதிப்பில் 35 தேனீ தொகுப்புகள் அமைக்கப்படும்

  • 10:45 AM

    நகர்புற மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் 500 பயனாளிகளுக்கு செங்குத்து தோட்டக்கலை 75 லட்ச ரூபாயில் வழங்கப்படும்

  • 10:45 AM

    உயிர் விளைச்சல் தர துல்லிய பண்ணையம் திட்டம் திட்டம்

    அதிக மகசூல் பெற 8300 ஏக்கர் பரப்பளவில் ₹5கோடி செலவில் ஊக்கிக்கப்படும்

  • 10:45 AM

    ஏற்றம் தரும் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம்

    அதிக வருவாய் தரும் காய்கறிகள், மலர்கள், பழங்கள் பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்

  • 10:45 AM

    விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்புகளின் எடையை கணக்கிட நவீன இணைய மையங்கள் அமைக்கப்படும்

  • 10:30 AM

    கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

  • 10:30 AM

    ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறுகுறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • 10:30 AM

    இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க, வேளாண் & தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி; ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்.

  • 10:30 AM

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் 7 உலக பயிற்சி நிலையம் துவங்குவதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் பயிர் வளர்ச்சி கண்டறிதல் போன்றவை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

  • 10:30 AM

    தேவையான விதைகளை முன்கூட்டியே பயனாளிகள் கணினியில் பதிவு செய்தால் உரிய நேரத்தில் அவர்களுக்கு அது கிடைக்கப்பெற வழிவகை செய்யப்படும்.

  • 10:30 AM

    விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு மூலம் தெரிவித்து அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.

  • 10:30 AM

    எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரித்திட 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 10:30 AM

    பொருளாதாரத்தில் முக்கிய பணியாற்றும் பருத்தி உற்பத்தியை பெருக்க 15 கோடி மதிப்பில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

  • 10:30 AM

    கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் திருவண்ணாமலை அடங்கிய துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைப்பு

  • 10:30 AM

    சிறுதானிய ஊட்டச்சத்துகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல திருவிழாக்கள் நடத்தப்படும்.

  • 10:30 AM

    செம்மரம், சந்தனம், தேக்கு உள்ளிட்ட மதிப்புமிக்க மரகன்றுகள் விவசாயிகளுக்கு மானியம் மூலம் வழங்கப்படும்.

  • 10:30 AM

    விவசாயம் சார்ந்த தொழிலை வியாபாரமாக மாற்ற ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்

  • 10:15 AM

    நெல்லுக்கு பின் பயிர்வகை சாகுபடியை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 10:15 AM

    நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 75 லட்சம் நிதி ஒதுக்கீடு

  • 10:15 AM

    மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம். இதற்காக 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்

  • 10:15 AM

    அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் மழையில் நனையாமல் இருக்க 5 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு தார்பாய் வழங்கப்பட்டுள்ளது.

  • 10:15 AM

    ”புன்னகை புரிய மறந்த விவசாயிகள் சில்லரையை சிந்தியது போல் சிரிக்க வேண்டும்”

    உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 10:15 AM

    காலநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பருவம் தவறுவதால் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படுகின்றன.

    புவிவெப்பம் உயர்வதால் நிலத்தடி நீர் குறைகிறது.

  • 10:15 AM

    கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட 3, 35 ஆயிரம் விவசாயிகளுக்கு  தேவையான இடுபொருள் வழங்கப்பட்டுள்ளது

  • 10:15 AM

    2021ஆம் ஆண்டு புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் விவசாயம் செய்திட 156 கோடி ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

Trending News