'மக்களைத்‌ தேடி மருத்துவம்‌' திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ என்ற இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்‌.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 5, 2021, 02:27 PM IST
'மக்களைத்‌ தேடி மருத்துவம்‌' திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் title=

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தில் தொற்று நோய பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக, மக்களின்‌ வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்று பரிசோதனைகளை செய்தல்‌, தேவைப்படும்‌ மருந்துகளை வழங்குதல்‌, உதவி சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவையை தொடக்கி வைத்தார். 

மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ என்ற இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரியில் முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) இன்று தொடங்கி வைத்தார்‌. இத்திட்டத்தினை தொடங்கி வைத்த, முதல்வர் ஸ்டாலின், இரண்டு பயனாளிகளின்‌ இல்லங்களுக்கு நேரில்‌ சென்று அவர்களுக்கு மருந்துகள் வழங்கி, மருத்துவ சேவை கொடுக்கப்படுவதை பார்வையிட்டார்‌.

ALSO READ | TN Budget: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஆகஸ்ட் 9 என்ன எதிர்பார்க்கலாம்?

இத்திட்டத்தின்‌ முதற்கட்டமாக 30 இலட்சம்‌ குடும்பங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, இந்த ஆண்டு இறுதியில்‌ மாநில அளவில்‌ அனைவரும் இந்த பனலை பெற இந்த திட்டம்‌ வழிவகுக்கும்‌.

மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ என்ற இந்த திட்டத்தின்‌ மூலம்‌, ‌45 வயது அதற்கு மேற்பட்ட நோயாளிகள், நேரில் வ்ர முடியாத‌ இயலாமையில்‌ உள்ளவர்களுக்கு உயர்‌ இரத்த அழுத்தம்‌ / நீரிழிவு நோய்க்கான மருந்துகளை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்குதல்‌, ஆகியவை உட்பட அனைத்து சுகாதார தேவைகளையும்‌ வழங்குவதுடன்‌ தொடர்ந்து உடல் நிலையை கண்காணிக்கவும்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, சமுதாய நலப்‌ பதிவேட்டில்‌ ஒவ்வொரு நோயாளி தொடர்பான தகவல்களை பதிவு செய்து தொடர்ந்து கண்காணிப்பது இத்திட்டத்தின்‌ மற்றொரு முக்கிய அம்சமாகும்‌. இத்திட்டத்தில்‌ தமிழ்நாடு மகளிர்‌ நல மேம்பாட்டு நிறுவனத்தில்‌ பயிற்சி பெற்ற பெண்‌ சுகாதாரத்‌ தன்னார்வலர்கள்‌, செவிலியர்‌, இடைநிலை சுகாதாரச்‌ சேவை வழங்குபவர்கள்‌ ஆகியோர்‌ பங்கு பெறுவர்‌. 

இத்திட்டம்‌ சூளகிரியில்‌ தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில்‌ மதுரை, கோயம்புத்தூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சி, சேலம்‌, திருநெல்வேலி மற்றும்‌ சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும்‌ வீடியோ கான்பரென்சிங் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‌. மேலும்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தின்‌ கீழ்‌‌ பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனங்களின்‌ சேவைகளைகளையும் இன்று தொடங்கி வைத்தார்‌.

இவ்விழாவில்‌, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ உள்ள கேட்டர்பில்லர்‌ நிறுவனம்‌, டாடா நிறுவனம்‌, ஒலா நிறுவனம்‌, டிவிஎஸ்‌ நிறுவனம்‌, உள்ளிட்ட பல நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ சுமார் ஒரு இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு, பெரு நிறுவனங்களின்‌ சமூக பொறுப்புணர்வு நிதியின்‌ கீழ்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌ மூலம்‌ கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணியினையும், மு.க.ஸ்டாலின் அவர்கள்‌ இன்று தொடங்கி வைத்தார்‌.

இவ்விழாவில்‌, கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை அமைச்சர்‌ திரு.ஆர்‌. காந்தி, சுகாதார துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும் உயர்‌ அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

ALSO READ | TN Budget: 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News