வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 16, 2021, 08:45 AM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை  title=

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 16, சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.

மேலும், அரபிக்கடலில் உருவான மற்றும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலைக்கொண்டுள்ளது. 

இவற்றினால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சனி மற்றும் ஞாயிறு என இரு நாட்களிலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம், வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read Also | 23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை

இந்த அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும். இன்று, பிற வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News