தமிழ்நாடு: டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு, கேரளாவுடனான பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2021, 08:40 PM IST
தமிழ்நாடு: டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு title=

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் கடந்த மே மாதம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் தடுப்பூசிகள் செலுத்துவதும் மாநிலம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. பரவலாக வைரஸ் தொற்று விகிதம் மிக குறைவான எண்ணிக்கையை எட்டியபிறகு, ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ALSO READ | Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!

 

அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பொது இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், கேரள அரசுடனான பொதுப்போக்குவரத்து மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. அம்மாநிலத்தில் கொரோனா பரவல் இருந்ததால், தமிழக அரசு தொடர்ந்து பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கவில்லை.

ALSO READ | இந்தியாவில் நுழைந்ததா ஒமைக்ரான்; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!!

 

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுநாள் வரை அனுமதிக்கப்படாமல் இருந்த கேரள மாநில பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை என்பதை நினைவூட்டியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும், தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என புதிய ஊரடங்கு அறிவிப்பில் அறிவுறுத்தியுள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணை 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது: துரைமுருகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News