மாநகராட்சி ஆணையர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2021, 09:59 AM IST
மாநகராட்சி ஆணையர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு title=

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin) தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ,காவல் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பணி இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று தஞ்சை, திருச்சி, ஆவடி, திண்டுக்கல் ஆகிய 4 மாநகராட்சிகளின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 ALSO READ | காவிரி தான் எங்களுக்கு வாழ்வுரிமை; தமிழ்நாட்டிற் முழு உரிமை உள்ளது: முதல்வர்

தமிழகத்தில் (Tamil Nadu) இந்த மாநகராட்சியின் ஆணையர்கள், நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ,திண்டுக்கல், ஆவடி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு , திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரெஹ்மானை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக கே சிவகுமாரும் , தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ALSO READ | மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Trending News