கொரோனா ஒழியவில்லை; மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 4, 2021, 01:48 PM IST
  • கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும்.
  • தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை.
  • அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா ஒழியவில்லை; மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்:  முதல்வர் ஸ்டாலின்  title=

கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழகத்தில் இன்னும் கொரோனா முழுமையாக ஒழியவில்லை. முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், பொருளாதார பாதிப்பு, மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மட்டுமே பல்வேறு ஊரடங்கில் பல தளர்வுகளை (TN Lockdown) அறிவித்தோம். ஆகவே, பொதுமக்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

”கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரம் என்ற அளவை தொட்ட தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது.

முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, திறமையான நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாகவும்தான் இந்த அளவுக்கு நாம் வெற்றியைப் பெற முடிந்தது. 

கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கூற முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டதால், எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று மக்கள் யாரும் நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ALSO READ | செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம்

அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால் இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் என்பதால், இன்னும் திறக்கப்படவில்லை என்ற காரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி தான் (Corona Vaccine) மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக  இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. இந்நிலையில், மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும். அவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படி வரும்போதும் கோரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ | Covaxin செயல்திறன் அபாரம்! பாரத் பயோடெக்கின் ஆய்வு முடிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News