தமிழகத்தில் மீண்டும் மினி லாக்டவுன்? புதன்கிழமை அறிவிப்பா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால், மினி லாக்டவுன் அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 10:19 PM IST
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை
  • கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
  • மினி லாக்டவுன் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகாவல்
தமிழகத்தில் மீண்டும் மினி லாக்டவுன்? புதன்கிழமை அறிவிப்பா? title=

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,731 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 1,728 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒப்பீட்டளவில் சுமார் ஆயிரம் பேருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ | சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்

சிகிச்சையில் இதுவரை 12,412 உள்ளனர். இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை உயர்வு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உடனடியாக கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ALSO READ | ALSO READ | நாடு முழுவதும் இன்று முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி

அதில், தமிழகத்தில் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இரவு நேர ஊடங்கு, பள்ளிக் கல்லூரிகள் செயல்படுவது, கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுளதாக கூறப்படுகிறது. இதில் இறுதி முடிவெடுக்கப்பட்டுளதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை காலையில் புதிய கட்டுப்பாடுகள், அதாவது மினி லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News