சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 09:32 AM IST
  • சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய பொதுமக்கள்
  • ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்
  • தமிழகத்தில் கொரோனா நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது
சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல் title=

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மற்றும் உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றிற்கு 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினம்தோறும் பாதிப்பு அதிகரித்து தற்போது 876 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னையின் நிலை மிக மோசமாக உள்ளது.

இந்த தொற்று பரவல் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு (Night Curfew) உள்ளிட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் (TN Corona Update) நேற்று வரை 118 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Night curfew imposed in several states amid Omicron threat- Check full list  here

ALSO READ | நாடு முழுவதும் இன்று முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா  பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

COVID-19 cases in Tamil Nadu cross 1 lakh, 40,000 new cases reported in  last 10 days | Tamil Nadu News | Zee News

அத்துடன் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு சிலர் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முகக் கவடம் அணியாமல் சுற்றித் திரிந்த 1022 பேரிடம் அபராதம் வசூலித்துள்ளனர். அதன்படி சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News