சேப்பாக்கத்துக்கு டூர் போகலாம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் திட்டம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போட்டிகள் அல்லாதபோது நேரில் பார்வையிட அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 17, 2023, 01:57 PM IST
சேப்பாக்கத்துக்கு டூர் போகலாம்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் திட்டம் title=

தமிழகத்தின் அடையாளங்களுள் ஒன்றாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டிருந்த இரண்டு கேலரிகள் இடிக்கப்பட்டு, மீண்டும் விதிமுறைகளுக்குட்பட்டு புதிய வடிவில் மைதானத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடையவில்லை என்றாலும், அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐசிசி முன்னாள் சேர்மன் சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்ட பல சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 

மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணிக்கு வேறு வழியில்லை... முதல் போட்டியின் பிளேயிங் லெவன் கணிப்பு

மு.க.ஸ்டாலின் திறப்பு

சேப்பாக்கம் மைதானம் நவீன கட்டமைப்புகளுடன் வடிவமைக்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதே மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்டபோது கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். இப்போது கட்டப்பட்டிருக்கும் கலைஞர் பெயரிலான கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மைதான திறப்பு விழாவிற்கு பிறகு முதல் போட்டியாக சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக அனைத்து கட்டுமான பணிகளையும் முடித்துவிட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டிருக்கிறது. இதனையொட்டி கட்டுமான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி

மைதானத்தின் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ரசிகர்கள் மைதானம் முழுவதும் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கால்பந்து மைதானங்களை போட்டி அல்லாத நேரத்தில் ரசிகர்கள் மைதான டூர் என்ற பெயரில் சுற்றிப் பார்க்க அனுமதி இருக்கிறது. அப்போது வீரர்களின் ஓய்வறைகள் மற்றும் மைதானத்தின் அருங்காட்சியகம், அந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டி குறித்த சுவாரஸ்யங்கள் குறித்து ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோன்றதொரு நடைமுறையை சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டு வர இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது.

எப்போது முதல் அனுமதி

இந்தியாவை பொறுத்தவரை மைதான டூர் என்பது எங்கும் கிடையாது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன. ஆனால் மைதான டூர் என்ற நடைமுறை இல்லை. முதன்முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. சேப்பாக்கத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர் மைதான டூர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

மேலும் படிக்க | IPL 2023: தோனிக்கு 41 வயது நிஜமா? பைசெப்களுடன் பயிற்சி எடுக்கும் தல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News