Vadakalai vs Thenkalai: வடகலை - தென்கலை அடிதடி... கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம் - என்னதான் பிரச்னை?

Vadakalai Thenkalai Attack Viral Video: பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளோடு முடிவடையும் வடகலை தென்கலை பிரச்னை தற்போது கைகலப்பாக மாறி அடிதடி, கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Jan 18, 2024, 01:31 PM IST
  • இந்த பிரச்னை சார்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.
  • பக்தர்களும் இந்த அடிதடி சண்டையை கண்டு முகம் சுழித்து வருகின்றனர்.
  • திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை தொடர்கதையாக உள்ளது.
Vadakalai vs Thenkalai: வடகலை - தென்கலை அடிதடி... கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம் - என்னதான் பிரச்னை? title=

Kanchipuram, Vadakalai Thenkalai Attack Viral Video: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோயில் என பிரசித்து பெற்றுவிட்டது. ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

நிலுவையில் வழக்கு

அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் (ஜன. 16) புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார்.

தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை தென்கலை சார்ந்த கோஷ்டிகள் திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொண்டு தொட்டு வருகிறது. வடகலை - தென்கலை பிரிவினர்களுக்கு இடையே  பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

மேலும் படிக்க | ராமர் கோவில் வருவது பிரச்னை இல்லை... இதனால் திமுக எதிர்க்கிறது - உதயநிதி பளீச்

கொலை மிரட்டல் அளவுக்கு...

இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி, இருபிரிவினர்களும் இக்கோவிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதித்தது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. தேவராஜ் சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்தபோது வடகலை தென்கலை இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும் போது, வடக்கலை தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது. 

அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி விரட்டி தாக்குவதும் அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்து பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்றுவிட்டனர்.

பெருமாளே வந்தாலும் நிறுத்த முடியாது

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சீபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். வடகலை தென்கலை என இரு பிரிவினரும் மோதிக் கொள்ளும் காட்சியை கண்டு இந்த பிரச்சனையை தேவராஜ பெருமாள் வந்தால் கூட முடிக்க இயலாது. இவர்களின் சண்டையினால் நாங்கள் சாமியை தரிசனம் செய்வது தடையாக உள்ளது என பக்தர்கள் வேதனையுடன் கூறினர்.

வடகலை தென்கலை பிரிவினரின் சண்டையை பக்தர்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்திய‌தோடு இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது தற்போது வைரலாக பரவி பேசும் பொருளாக மாறி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News