ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - கலக்கும் தென்னக ரயில்வே

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயில் எஞ்சினில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 19, 2022, 01:32 PM IST
  • ஜூன் மூன்றாம் தேதி வெளியாகிறது விக்ரம்
  • விக்ரம் பட உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்ஸ்
  • ரயில் எஞ்சினில் விக்ரம் பட விளம்பரம்
ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - கலக்கும் தென்னக ரயில்வே title=

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Vikram

'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

மேலும் படிக்க | தனுஷ் பட வில்லனின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஈரோட்டில் ரயில் எஞ்சின் ஒன்றில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

 

இதனை தென்னக ரயில்வே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை 4 முறை பார்த்த பிரபல நடிகை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News