Tamil Nadu Rains : 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 4, 2022, 06:56 AM IST
  • சென்னையில் விடிய, விடிய கனமழை.
  • சென்னையில் நேற்றும் மட்டும் 3.52 செ.மீ.,க்கு மழை பதிவாகியுள்ளது.
  • தற்போது, சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rains : 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை title=
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு (நவ. 3) 9.15 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில்,"கடந்த 24 மணிநேரத்தில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
 
அதிகபட்சமாக நேற்று (நவ. 3) மகாபலிபுரத்தில் 9 செ.மீ., மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஆகியவை தலா 7 செ.மீ., திருப்போரூர் 6 செ.மீ., காட்டுப்பாக்கம் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, நேற்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 9 மணிவரை, வில்லிவாக்கத்தில் (திருவள்ளூர்) 3.35 செ.மீ., சென்னையில் 3.52 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் (காஞ்சிபுரம்) 2.1 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகத்தில் (காஞ்சிபுரம்) 3.1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயருதல், பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுதல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட கனமழை பாதிப்புகள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சென்னையில், நேற்று மாலையில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்து வந்தது. மேலும், கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 4) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும், புதுச்சேரி. காரைக்காலிலும் இன்றும் (நவ. 4), நாளையும் (நவ. 5) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கரூர், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தண்டையார்பேட்டை, வேளச்சேரி, வண்டலூர், வாலஜாபாத், நெமிலி, அரக்கோணம் ஆகியவற்றுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு

 
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News