சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு இன்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நேரு,"சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொடர்புக்கொண்டு பாதிப்புகள் குறித்த புகார்களை அளிக்கலாம், உதவிகளை கோரலாம்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்குவதற்கு ஏற்றார் போல் 163 தங்குமிடங்களும், உணவு, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தி தர தயாராக உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கள பணிகளை நேரில் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மழைநீர் வடிகால் இல்லாத சில பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதிகளில் மோட்டார் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை பெய்ய தொடங்கியது முதல் இரவுப் பகலாக சென்னை முழுவதும் 19,500 பணியாளர்கள் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
மேலும் மக்கள் பாதிக்காத வண்ணம் பணிகளை துரிதப்படுத்தவேண்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. @MMageshkumaar, முதன்மை செயலாளர் திரு. @GSBediIAS அவர்கள் மற்றும் அதிகாரிகள். pic.twitter.com/aQme74qiOP
— Priya (@PriyarajanDMK) November 1, 2022
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "2015ஆம் ஆண்டு, மழை வெள்ளத்திற்கு பிறகும் ஆட்சியில் இருந்தவர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர்தான், நிரந்தர தீர்வை அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால்தான், பல பகுதிகளில் இன்று மழைநீர் தேங்கவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும் படிக்க | அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்... சென்னையில் அண்ணாமலை கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ