புதுடெல்லி: Aarogya Setu செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த செயலி முதலில் நோய்த்தொற்றின் தடமறிய பயன்படுத்தப்பட்டது. எனினும், நாட்கள் செல்ல செல்ல இதில் இன்னும் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இப்போது இந்த செயலி தடுப்பூசி நிலை குறித்த புதுப்பித்தல்களையும் உங்களுக்கு அளிக்கும். உங்கள் அருகில் உள்ளவர்களில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதையும் இனி அறிய முடியும்.
Now your Vaccination Status can be updated on Aarogya Setu. Get your self vaccinated - Get the Double Blue Ticks and Get the Blue Shield.#SetuMeraBodyguard #IndiaFightsCorona @NICMeity @GoI_MeitY @_DigitalIndia @mygovindia @MoHFW_INDIA @NITIAayog pic.twitter.com/qhJh7t1ukK
— Aarogya Setu (@SetuAarogya) May 25, 2021
இது குறித்த தகவல் ட்வீட் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 'இப்போது ஒருவரின் தடுப்பூசி நிலையை (Vaccination Status) ஆரோக்கிய சேது செயலியின் மூலமும் புதுப்பிக்க முடியும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். டபுள் ப்ளூ டிக் பெற்று ப்ளூ ஷீல்டை பெறுங்கள்.' என்று ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியபிறகு, நீல நிற டிக் குறியைக் காண்பீர்கள். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டபிறகு, இரண்டு நீல நிற டிக்குகள் காண்பிக்கப்படும்.
ALSO READ: CoWIN போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே
இந்த வழியில் பதிவு செய்யலாம்
இதுவரை, CoWIN போர்ட்டல் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கான பதிவு மற்றும் நியமனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இப்போது ஆரோக்ய சேது (Aarogya Setu) செயலியின் மூலம் தடுப்பூசி பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளது. ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்ய, பயனர்கள் முதலில் இந்த செயலியைத் திறந்து பின்னர் கோவின் டேப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, பயனர்கள் தடுப்பூசி பதிவில் கிளிக் செய்து, பின்னர் அவர்களின் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, OTP உதவியுடன் பதிவை முடிக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயனர்கள் பதிவு பக்கத்தில் அனைத்து தகவல்களையும் பதிவேற்ற வேண்டும். அதில் புகைப்பட ஐடி, பெயர், பாலினம் மற்றும் பிற தகவல்கள் கேட்கப்படும்.
இந்த செயலியை என்ஐசி இயக்குகிறது. இப்போது தடுப்பூசி (Vaccination) போடப்பட்டவர்களின் தரவுகளும் இந்த செயலியில் புதுப்பிக்கப்படும். மேலும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதும் நமக்குத் தெரியவரும். தடுப்பூசி பெறும் இந்த செயலியின் பயனர்களுக்கு டபுள் ப்ளூ டிக் கிடைக்கும். இதன் மூலம் அந்த பயனருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிகளில் மாற்றம்: 18-44 வயதுக்குட்பட்டோருக்கான தகவல் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR