கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிகளில் மாற்றம்: 18-44 வயதுக்குட்பட்டோருக்கான தகவல் இதோ

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் (CoWIN) போர்ட்டல் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. எனினும், இந்த விதியை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றிவிட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2021, 04:14 PM IST
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • இந்த வயதினருக்கான தடுப்பூசி செயல்முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிகளில் மாற்றம்: 18-44 வயதுக்குட்பட்டோருக்கான தகவல் இதோ  title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. ஒருபுறம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம், போர்க்கால அடிப்படையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. 

இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா (Coronavirus) தடுப்பூசி (செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் (CoWIN) போர்ட்டல் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. எனினும், இந்த விதியை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் மாற்றிவிட்டது, இப்போது இந்த வயதினர் தடுப்பூசி மையத்திற்கு சென்று நேரடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆன்லைன் பதிவு செய்வதற்கான வசதியும் உள்ளது
18 வயது முதல் 44 வயது வரையிலான வயதினருக்கான தடுப்பூசிக்கு இப்போது ஆன்லைன் பதிவிற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நேரடியாக தடுப்பூசி (Vaccine) செலுத்திக்கொள்ளலாம். எனினும், இதற்கு கோவின் போர்ட்டலில் (Cowin.gov.in) பதிவு செய்யப்பட வேண்டும்.

ALSO READ: COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை

ஆன்சைட் தடுப்பூசி பெறுவது எப்படி
தினமும் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நேரம் முடிந்ததும், அல்லது, நாள் இறுதியில் செலுத்தப்படாமல் இருக்கும் தடுப்பூசிகள் இருந்தால், அவை, ஆன்சைட் ஏற்பாட்டின் கீழ் இந்த வயதினருக்கு அளிக்கப்படும். தடுப்பூசிகள் வீணாகாமல் இருக்க இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த புதிய வழிமுறை பற்றி கோவின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, இந்த ​​புதிய வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே இருக்கும்.

அரசாங்கம் ஏன் விதிகளை மாற்றியது
பலர் தடுப்பூசிக்கான ஸ்லாட்டை பதிவு செய்த பின்னரும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு வருவதில்லை. இதன் காரணமாக, தடுப்பூசிகள் பல வீணாவதாக செய்திகள் வருகின்றன. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் (Health Ministry) இந்த முடிவை எடுத்துள்ளது. இது தவிர, கிராமப்புற அளவில் ஆன்லைன் முன்பதிவு குறித்த தகவல்கள் இல்லாததால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: COVAXIN தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியுமா; WHO கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News