Airtel vs Vodafone Idea vs Jio: அதிக வருவாயை ஈட்ட டெலிகாம் ஆபரேட்டர்கள் ப்ரீ-பெய்ட் கட்டணத் திட்டங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ஏர்டெல் தனது ப்ரீபெய்டு திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. அதேபோல் சற்று முன்பு வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்டு திட்டங்களை விலை உயர்த்தியது. ஏர்டெல்லின் புதிய திட்டம் நவம்பர் 26 முதல் அமலுக்கு வரும், அதே சமயம் வோடபோன் ஐடியாவின் திருத்தப்பட்ட கட்டணத் திட்டங்கள் நவம்பர் 25 முதல் அமலுக்கு வருகிறது.
ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) இந்த முடிவிற்குப் பிறகு, தங்கள் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. சரி, ஏர்டெல்லுடன் ஒப்பிடும்போது இந்த நேரத்தில் வோடபோன் ஐடியா, ஜியோவின் (Reliance Jio) திட்டம் எவ்வளவு குறைவானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி
Unlimited calling plans – 28 days validity
ஏர்டெல்லின் அடிப்படை வரம்பற்ற அழைப்புத் திட்டம் தற்போது ரூ. 179 இல் தொடங்குகிறது, மேலும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவுடன் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. அடுத்ததாக ரூபாய் 299 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் அதே பலன்களை வழங்கப்படுகிறது, ரூ.359 திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அதே சலுகைகளைப் பெறுவீர்கள்.
ஜியோ ரூ.149 திட்டத்தை (24 நாட்கள்) வழங்குகிறது, இதில் வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும். ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா (28 நாட்கள்) திட்டத்திற்கு ரூ.199 ஆகும். 2ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு ரூ.249. ரூ.349 பேக்கில் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது.
வோடபோன் ஐடியாவைப் பொறுத்தவரை, ரூ. 299 திட்டதில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (28 நாட்கள்) வழங்கப்படும். ரூ.359 திட்டதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.
Unlimited calling plans – 56 days validity
56 நாட்கள் அல்லது தோராயமாக இரண்டு மாதங்களுக்கு, ஏர்டெல் இரண்டு வரம்பற்ற திட்டங்களை வழங்குகிறது. ரூ.479 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.549 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
ALSO READ | ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்வு; புதிய ரேட் என்ன?
ஜியோ பற்றி பேசுகையில் ரூ.399க்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவும், ரூ.666க்கு 2ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
Vodafone Idea உடன், நீங்கள் ஒரு நாளைக்கு 1.5GB திட்டம் ரூ.479 மற்றும் ஒரு நாளைக்கு 2GB திட்டம் ரூ.539, இவை இரண்டும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100SMS வழங்குகிறது.
Unlimited calling plans – 84 days validity
ஏர்டெல் 84 நாட்களுக்கு மூன்று திட்டங்களை வழங்குகிறது. மொத்தம் 6ஜிபி டேட்டாவை ரூ.455க்கு பெறலாம். ரூ.719 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவும், ரூ.839 திட்டமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை ரூ.555க்கும், 2ஜிபி டேட்டாவை ரூ.888க்கும், 3ஜிபி டேட்டாவை ரூ.999க்கும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை ரூ.719 மற்றும் 2ஜிபி டேட்டாவை ரூ.839க்கு வழங்குகிறது. மேலும் ரூ.459க்கு 6ஜிபி டேட்டா திட்டமும் உள்ளது.
Data top ups/ Data booster plans
ஏர்டெல் மூன்று டேட்டா பூஸ்டர் திட்டங்களை 3ஜிபிக்கு ரூ.58, 12ஜிபிக்கு ரூ.118 மற்றும் 50ஜிபிக்கு ரூ.301 என மூன்று டேட்டா பூஸ்டர் திட்டங்களை வழங்குகிறது, இவை அனைத்தும் unlimited validity ஆகும் (உங்கள் தற்போதைய திட்டம் முடியும் வரை).
ஜியோ ரூ.11க்கு 1ஜிபி டேட்டாவையும், ரூ.21க்கு 2ஜிபி டேட்டாவையும், ரூ.51க்கு 6ஜிபி டேட்டாவையும், ரூ.101க்கு 12ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. 30 ஜிபிக்கு ரூ.151, 40ஜிபிக்கு ரூ.201 மற்றும் 50ஜிபிக்கு ரூ.251 என 30 நாள் வேலிடிட்டியுடன் ‘Work from home’ டேட்டா பூஸ்டர்களும் உள்ளன.
வோடபோன் ஐடியா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.58க்கு 3ஜிபி டேட்டாவையும், ரூ.118க்கு 12ஜிபி டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ரூ.298 திட்டத்தில் 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டா, ரூ.418 திட்டத்தில் 56 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவை வழங்கும்.
ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR