தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!!

வட சென்னையில் உள்ள குடிசை பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த பல பகுதிகளில் இது வரை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு சேவை இல்லை. இந்த பகுதிகளை தனியார் நிறுவனகளும் கண்டுகொள்ளவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2020, 03:02 PM IST
  • வட சென்னையில் உள்ள குடிசை பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த பல பகுதிகளில் இது வரை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு சேவை இல்லை. இந்த பகுதிகளை தனியார் நிறுவனகளும் கண்டுகொள்ளவில்லை.
  • பி.எஸ்.என்.எல் இன் நடவடிக்கையினால், இப்போது வடக்கு சென்னையின் உள்ள பள்ளி குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்கும் மற்றும் இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் மிகவும் உதவிகரமாக உள்ளது.
  • வட சென்னையில் உள்ள புலியந்தோப்பு, பட்டாளம், ஒட்டேரி மற்றும் சூலை ஆகிய இடங்களில் ஆப்டிக் ஃபைர் மூலம் அதி வேக இணைய வசதியை BSNL ஏற்படுத்தி வருகிறது.
தனியாரால் புறக்கணிக்கப்படும் வட சென்னைவாசிகள், ஆபத்பாந்தவனாகும் BSNL..!!! title=

தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL), தனியாரால் புறக்கணிக்கப்பட்ட வடக்கு சென்னையின் நெரிசலான மற்றும் சேரி  பகுதிகளில், அவர்களுக்கு உதவும் வகையில், அதிவேக இணைய தள சேவையை  கொடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிக வருமானம் தராத பகுதிகள் என்ற எண்ணத்தில்  தனியார் நிறுவனங்கள் பல இந்த பகுதியை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

பி.எஸ்.என்.எல் இன் (BSNL) நடவடிக்கையினால்,  இப்போது வடக்கு சென்னையின் உள்ள பள்ளி குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்கும்  மற்றும் இதர பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் மிகவும் உதவிகரமாக உள்ளது. ஏனென்றால் மொபைல் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் , அதி வேகத்துடன் இருப்பதில்லை என்பதால், வேலையை தடையின்றி செய்ய முடியாமல் இவர்கள் தவித்து வந்தனர்.

மேலும் படிக்க | பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

வட சென்னையில் உள்ள புலியந்தோப்பு, பட்டாளம், ஒட்டேரி மற்றும் சூலை ஆகிய இடங்களில் ஆப்டிக் ஃபைர் மூலம் அதி வேக இணைய வசதியை BSNL ஏற்படுத்தி வருகிறது. மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் கட்டணங்கள் மிகவும் குறைவாக உள்ளது என்பதால் மக்களும் அதிக விரும்புகின்றனர்.  மறைமுக கட்டணங்கள் ஏதும் இல்லை என்பதால் மத்திய சென்னையில் உள்ள பல பகுதிகளிலும் பலர் BSNL இணைப்பை கேட்டு பெறுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், பி.எஸ்.என்.எல், ஒரு சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்களது லேண்ட்லைனை, ஃபைபர்-டு-ஹோம் இணைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

கொரோனா நெருக்கடியில், இணைய இணைப்பு என்பது இன்றியமையாகி போன இந்த நேரத்தில், வட சென்னையின் பல பகுதிகளில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைய சேவை இல்லை. மொபைல் மூலம் பெறப்படும் இணைய தள சேவையில் அதிக வேக இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், வட சென்னை வாசிகளுக்கு BSNL வழங்கும் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு மிகவும் வரப்பிரசாதமாக உள்ளது.

"வடக்கு சென்னை முழுவதும் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய வீடுகளுக்க்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வீட்டு இணைப்புகளுக்கான ஃபைபர் மூடப்பட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | என் பெயரை வைத்து மோசடி செய்கிறார்கள்: தல அஜித் எச்சரிக்கை..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News