பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான  மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கல், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 08:25 PM IST
  • பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கல், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளன.
  • அனைத்து மாணவர்களும் ஆன் லைன் கல்வி பெறுவதற்கான வசதி இல்லை. ஃபோன் அல்லது கணிணி போன்றவை தேவைப்படுகின்றன.
பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன் title=

நான்கட்ட அன்லாக் தொடர்பாக மத்திய அரசு பள்ளிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

நான்காம் கட்ட அன்லாக் (Unlock 4.0) மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு கூறியது. எனினும், மாநிலங்கள், கொரோனா (Coroana) தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும்,  மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பெற்றோர்கள் மற்றும் அவர்களது வார்டுகளின் ஆலோசனைகள் இல்லாமல் பள்ளிகளை மீண்டும் திறப்பது நடைபெறாது என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  | அரசின் ஒப்புதலுக்கு முன்னரே, பள்ளியை திறக்கும் தேதியை முடிவு செய்த தனியார் பள்ளிகள் ..!!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன் லைன் கல்வி பெறுவதற்கான வசதி இல்லை. ஃபோன் அல்லது கணிணி போன்றவை தேவைப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் ஆன் லைன் வகுப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மீண்டும் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை  மத்திய அரசு  வெளியிட்ட பின்னர், இனி மாநிலங்கள் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

ரூ. 97 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் போது கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு பதில் அளித்தார்.

முன்னதாக அவர் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறையை அளித்துள்ளார். 

ALSO READ | செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..!!!

Trending News