கார் வாங்க சரியான நேரம்: ஹுண்டாய் கார்களில் பம்பர் தள்ளுபடி

Hyundai Car Offers: ஹுண்டாய் நிறுவனம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஹூண்டாய் தனது பல கார்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 03:58 PM IST
  • ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு பல வித சலுகைகளை வழங்குகிறது.
  • ஒட்டுமொத்தமாக, அனைத்திலும் ரூ.1.24 லட்சம் வரை சலுகைகள் உள்ளன.
  • வேரியண்ட்டைப் பொறுத்து, 48,000 ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை நிறுவனம் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்கு வழங்கியுள்ளது.
கார் வாங்க சரியான நேரம்: ஹுண்டாய் கார்களில் பம்பர் தள்ளுபடி title=

ஹுண்டாய் கார் சலுகைகள்: பைக்கில் பயணம் செய்யும் போது சூரிய ஒளி நேரடியாக பைக் ஓட்டுபவர்களின் உடலில் படுவதால், அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும். இந்த கோடை சீசனில் பைக் ஓட்டுவது மிகவும் கடினம். 

அதே சமயம், ஒருவர் காரில் பயணம் செய்கிறார் என்றால், காரில் ஏசியை இயக்கி வசதியாக தனது பயணத்தை மேற்கொள்வதால், அவருக்கு பயணம் எளிதாக இருக்கும். இருப்பினும், ஒரு கார் வாங்குவது என்பது பெரும் செலவுகளை ஏற்படுத்துவதாகும். 

அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் கார் வாங்கும்போது சில சிறந்த சலுகைகள் கிடைத்தால், அது அவரது செலவை பெருமளவில் குறைக்கும், பணமும் சேமிக்கப்படும். 

இதை புரிந்துகொண்ட ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு பல வித சலுகைகளை வழங்குகிறது. ஹுண்டாய் நிறுவனம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஹூண்டாய் தனது பல கார்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒட்டுமொத்தமாக, அனைத்திலும் ரூ.1.24 லட்சம் வரை சலுகைகள் உள்ளன.

ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் ஆரா என்பது நிறுவனத்தின் நடுத்தர அளவிலான செடான் கார் ஆகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களிலும், சிஎன்ஜியிலும் கிடைக்கிறது. மாறுபாட்டைப் பொறுத்து, நிறுவனம் இந்த காருக்கு ரூ.48,000 வரை சலுகைகளை வழங்குகிறது. ரொக்க தள்ளுபடிகள், பரிமாற்ற பலன்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை இதில் அடங்கும். இதன் விலை ரூ 6,08,900 முதல் ரூ 7,87,600-க்கு இடையில் உள்ளது.

மேலும் படிக்க | இந்த SUV கார்களுக்கு அதிக டிமாண்ட், டாப் 10 பட்டியல் 

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் ஆகும். இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் சிஎன்ஜியிலும் வருகிறது. வேரியண்ட்டைப் பொறுத்து, 48,000 ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை நிறுவனம் காருக்கு வழங்கியுள்ளது. 

ரொக்கத் தள்ளுபடிகள், பரிமாற்ற பலன்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை இதில் அடங்கும். காரின் விலை ரூ.539,000 முதல் ரூ.769,800 வரை உள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ 

ஹூண்டாய் சான்ட்ரோ நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் காராகும். சான்ட்ரோ டீசல் எஞ்சினுடன் வழங்கப்படவில்லை. இது பெட்ரோல் எஞ்சினுடன் சிஎன்ஜி விருப்பத்தையும் பெறுகிறது. இந்த காரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ரொக்க தள்ளுபடிகள், பரிமாற்ற பலன்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை இதில் அடங்கும். ஹூண்டாய் சான்ட்ரோவின் விலை ரூ.489,700 முதல் ரூ.641,600 வரை உள்ளது.

மேலும் படிக்க | Scorpio N design: மஹிந்திரா ஸ்கார்பியோ N வீடியோ டிரெய்லர் டீசர் வெளியானது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News