ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இன்று ஹூண்டாய் கிராண்ட் 10 இன் கார்ப்பரேட் பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.6.29 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் 6,97,700 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை உள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உள்ளது.
புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன், 5எம்டி/ஏஎம்டி கியர்பாக்ஸ் விருப்பத்துடன் மேக்னா டிரிம் அடிப்படையிலானது. ஸ்டைலிங் மேம்பாடுகளைப் பொறுத்தவரை, புதிய ஹேட்ச்பேக் புதிய 15-இன்ச் கன் மெட்டல் ஸ்டைலிங் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பின்புற குரோம் அழகுபடுத்தல், கார்ப்பரேட் சின்னம், கருப்பு பெயிண்ட் செய்யப்பட்ட ஓஆர்விஎம்கள் போன்ற வசதிகள் உள்ளன.
மேலும் படிக்க | 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்
அதேபோல் இந்த காரில் அதே 6.75 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ஷன், எலக்ட்ரானிக் ஓஆர்விஎம்கள், எல்இடி இண்டிகேட்டர், எல்இடி லைட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. இதன் பவர் 83பிஎச்பி மற்றும் 113.8 என்.எம் டார்க் உள்ளது. இந்த காரில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்வசதி உள்ளது.
இந்த காரின் பாதுகாப்பு வசதிகள் பொருத்தவரை, இந்த கார் ஹெச்பிஏ, எஃப்சிஏ, லேன் அஸ்சிஸ்ட், ட்ரைவர் வார்னிங், ஸ்பீட் லிமிட் வார்னிங் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்டுள்ளன. இந்த காரில் தற்போதுள்ள ஸ்டாண்டர்ட் மாடல் காரை விட தனியாக டெக்னாலஜி மற்றும் வசதிகள் இடம்பெறும். அதேபோல் இந்த காரில் டூயல் ஏர் பேக் வசதி உள்ளது. இந்த கார் சராசரி காரை விட அதிக வசதிகள் மற்றும் டெக்னாலஜி அம்சங்கள் கொண்டு வருவதால் ஒரு முழு வசதி கொண்ட ஹாட்ச் பேக் காராக இந்த கார் இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் இந்த கார் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் அறிமுகம் செய்யப்பட்டதிற்லிருந்து வரவேற்பு அமோகமாக இருந்துவந்தந்தால் தற்போது ஸ்பெஷல் எடிஷன் காரை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR