OnePlus Nord CE 3 Lite: நம்ப முடியாத மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த OnePlus

OnePlus Nord CE 3 Lite: ஒன்பிளஸ் நிறுவனம் அட்டகாசமான மலிவு விலை 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2023, 01:15 PM IST
  • OnePlus Nord CE 3 Lite: முக்கிய விவரக்குறிப்புகள் இதோ.
  • OnePlus Nord CE 3 Lite: கேமரா அமைப்பு எப்படி உள்ளது?
  • OnePlus Nord CE 3 Lite: இந்தியாவில் இதன் விலை என்ன?
OnePlus Nord CE 3 Lite: நம்ப முடியாத மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த OnePlus title=

பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் மிக மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நிறுவனம் ஒன் பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) என பெயரிட்டுள்ளது. இதனுடன், பிராண்ட் Nord Buds 2 TWS இயர்போன்கள் பற்றிய அறிவிப்பையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போன் நார்ட் சிஇ 2 லைட் (Nord CE 2 Lite) இன் வரிசையில் அறிமுகம் செய்யபட்டுள்ள அடுத்த போனாகும். இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் உள்ளன. மேலும் அதன் நிறம் மற்றும் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. OnePlus Nord CE 3 Lite இன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

OnePlus Nord CE 3 Lite: விவரக்குறிப்புகள்

OnePlus Nord CE 3 Lite ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் சென்டர் சீரமைக்கப்பட்ட பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120HZ புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் பின்புறத்தில் இரண்டு கேமரா வளையங்கள் உள்ளன. இது தவிர, போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி உருவாக்கப்போகும் ஆபத்தை என்னால் யூகிக்க முடியவில்லை: சாம் ஆல்ட்மேன்

OnePlus Nord CE 3 Lite: கேமரா

OnePlus Nord CE 3 Lite இல் டிரிபிள் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதில் 108எம்பி முதன்மை கேமரா, 2எம்பி டெப்த் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை கிடைக்கின்றன. இது தவிர, முன்புறத்தில் 16எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

OnePlus Nord CE 3 Lite: பேட்டரி

OnePlus Nord CE 3 Lite ஸ்மார்ட்போன் Snapdragon 695 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பம் கொண்டது. இது தவிர, இது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு ஆப்ஷன்களுடன் வருகிறது. தொலைபேசியில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது.

OnePlus Nord CE 3 Lite: இந்தியாவில் இதன் விலை என்ன?
 
OnePlus Nord CE 3 Lite 128ஜிபி மற்றும் 256ஜிபி வகைகளில் வருகிறது. இதன் விலை முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999 ஆகும். இந்த போன் பேஸ்டல் லைம் மற்றும் க்ரோமேடிக் கிரே நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிராண்டின் இணையதளமான OnePlus Experience Stores மற்றும் அமேசான் ஆகியவற்றில் ஏப்ரல் 11 முதல் விற்பனைக்கு (ஓப்பன் சேல்) கிடைக்கும். ICICI வங்கி வாடிக்கையாளர்கள் Nord CE 3 Lite ஐ வாங்கினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

மேலும் படிக்க | ’இலவச இணையம்' ஹேக்கர்களின் பொறியில் சிக்கிவிடாதீர்கள் மக்களே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News