இணைய பயன்பாடு மக்களிடையே அதிகரித்திருப்பதை உணர்ந்திருக்கும் ஹேக்கர்கள், ’இலவச இணையம்’ என்ற பொறி மூலம் மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த பொறியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் ஏராளம். வெளியுலகிற்கு தெரிந்தவர்கள் சிலர் என்றால், தெரியாத முகங்கள் பல இருக்கின்றனர். இப்படியான மோசடிகள் எல்லாம் ஒரே ஒரு லிங்க் மூலம் அரங்கேற்றப்படுகிறது என்பது தான். சதுரங்க வேட்டை படத்தில் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரிடம் எல்லையில்லா ஆசையை தூண்ட வேண்டும் என்ற டையலாக் இடம்பெற்றிருக்கும். அந்த வகை மோசடியை சேர்ந்தது தான் இந்த இலவச இணையம் என்ற லிங்க் மோசடியும்.
மேலும் படிக்க | ரூ. 30000 தள்ளுபடி! பிளிப்கார்ட் தளத்தில் iPhone 14 Plus வாங்க இது சரியான நேரம்!
அதிக பணம் கொடுத்து டேட்டா வாங்க வேண்டுமா? என நினைப்பவர்கள் இந்த இலவச இணையம் என்ற லிங்கை பார்த்தவுடன் அதனை ஆசையாக கிளிக் செய்கிறார்கள். அதன் பின்னணியில் மோசடியாளர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. மாறாக அந்த லிங்கை கிளிக் செய்பவர்கள் அதில் சில தரவுகளை பூர்த்தி செய்யுமாறு கேட்கப்படுவார்கள். மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கப்படும். அதனை கொடுத்தபிறகு இந்த லிங்கை இன்னும் சிலருக்கு அனுப்பினால் மட்டுமே அந்த இலவச இணையம் கிடைக்கும் என்ற கட்டளையை கோரிக்கையாக வைப்பார்கள். மக்களும் இன்னும் ஒரே படியில் இலவச இணையம் கிடைக்கும் என்பதால் தங்களின் வாட்ஸ்அப்பில் இருக்கும் நண்பர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்புவார்கள்.
ஆனால் அதன்பிறகே தெரியும், இலவச இணையம் எல்லாம் கொடுக்கப்படாது. அதற்குள் உங்களின் தரவுகளும், உங்களால் நண்பர்களின் தரவுகளும் ஹேக்கர்களின் பிடியில் சென்றிருக்கும். அப்போது யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இன்னும் சில வகை மோசடிகளில் அந்த லிங்குகளை கிளிக் செய்யும்போதே உங்களின் தகவல்கள் அல்லது மொபைல் அவர்களின் பிடியில் சென்றுவிடும். அங்கிருந்தபடியே உங்கள் மொபைலின் தரவுகளை ஹேக்கர்களால் எடுத்துக் கொள்ள முடியும். டெலிபோன் நிறுவனங்கள் இதுபோன்ற ஆஃபர்களை ஒருபோதும் அறிவிப்பத்தில்லை. அப்படி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை மறு ஆய்வு செய்துகொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன.
எந்த நெட்வொர்க் சார்ந்து இலவச இணைப்பு வந்திருக்கிறதோ ... அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு விளக்கத்தை கேட்டுப் பெறுங்கள். உதாரணமாக ஏர்டெல் அல்லது ஜியோ என்றால் அந்தந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேட்டால் இலவச இணையம் கொடுப்பது தொடர்பான விளக்கத்தை கொடுத்துவிடுவார்கள். அதனை செய்யாமல் நேரடியாக லிங்கை கிளிக் செய்து அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்தால், நீங்கள் மோசடிக்காரர்களின் படியில் சிக்குவதை யாராலும் தடுக்க முடியாது. இது தொடர்பாக COAI-வும் விளக்கம் கொடுத்துள்ளது. இலவச இணையம் தொடர்பாக பரவும் செய்தியில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. இது மோசடிக்காரர்கள் பரப்பும் லிங்க் என்பதால் மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ரூ. 74999 விலை கொண்ட சாம்சங் Galaxy S20 FE 5ஜி போன் வெறும் 9999 ரூபாய்க்கு வாங்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ