Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி: இனி நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது!!

Netflix Password Sharing: நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. நெட்ஃபிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்ட் பகிரும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2023, 11:36 AM IST
  • நெட்ஃபிக்ஸ் இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது.
  • நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • Netflix household -ஐ அமைப்பது எப்படி?
Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி: இனி நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது!! title=

ஓடிடி தளங்கள் சமீப காலங்களில் மக்களின் அமோகமான ஆதரவை பெற்ற தளங்களாக மாறி வருகின்றன. இவற்றில் நெட்ஃபிக்ஸ் மிகவும் பிரபலமானது. இதில் ஒருவர் இதற்கான கட்டணத்தை செலுத்த பலர் இதில் ஸ்ட்ரீம் செய்யப்படும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், நெட்ஃபிக்ஸ் இப்போது இந்த நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஓடிடி இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ், பயனர்களுக்கு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அதில், இனி பயன்ர்களின் கணக்கை அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குடும்பத்திற்கு வெளியே வேறு யாரேனும் தங்கள் கணக்கைப் பயன்படுத்தினால், அவர்கள் தங்கள் ப்ரொஃபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும் (அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும்), அதன் பின் கடவுச்சொல்லை மாற்றுவது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்சின் இந்த நடவடிக்கை ஒரு அவசர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த எச்சரிக்கை ஏதும் வரவில்லை என்றாலும், இது எதிர்பாராததும் அல்ல. நெட்ஃபிக்ஸ் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்த பல அறிக்கைகள் பல நாட்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

நெட்ஃபிக்ஸ் இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்துகிறது

ஸ்ட்ரீமிங் ஜாம்பவானான நெட்ஃப்ளிக்ஸ், "இன்று முதல், இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு வெளியே நெட்ஃப்ளிக்ஸைப் பகிரும் உறுப்பினர்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவோம். நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு ஒரு குடும்பத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே ஆனது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ் -ஐப் பயன்படுத்தலாம். அவர்கள், வீடு, பயணத்தில், விடுமுறையில் எங்கு இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். மேலும், டிரான்ஸ்ஃபர் ப்ரொஃபைல் மற்றும் மேனேஜ் ஆக்சஸ் அண்ட் டிவைசஸ் ஆகிய புதிய அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என எழுதியுள்ளது.

"எங்கள் உறுப்பினர்களுக்குப் பல பொழுதுபோக்குத் தேர்வுகள் உள்ளன என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால்தான் பலவிதமான புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாங்கள் தொடர்ந்து அதிக முதலீடு செய்கிறோம் - எனவே உங்கள் ரசனை, மனநிலை அல்லது மொழி ஆகியவற்றுக்கு ஏற்ப, நெட்ஃப்ளிக்ஸில் பார்ப்பதற்கு திருப்தி அளிக்கக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்." என நெட்ஃப்ளிக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

பயனர்கள் தங்கள் கணக்கின் செக்யூரிடி மற்றும் ப்ரைவசி செட்டிங்குக்குச் சென்று, 'Manage access and devices' விருப்பத்தைத் செலக்ட் செய்ய வேண்டும். 

பின்னர், பயனர்கள் 'அணுகல் இருக்கக்கூடாத' சாதனங்களிலிருந்து சைன் அவுட் செய்து, தங்கள் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும். தங்கள் வீட்டிற்கு வெளியே யாராவது நெட்ஃப்ளிக்ஸ் -ஐப் பயன்படுத்தினால், ப்ரொஃபைலை மாற்றலாம்.

மேலும் படிக்க | இலவசமாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வேண்டுமா? உடனே இதை படியுங்கள்

Netflix household -ஐ அமைப்பது எப்படி? 

பயனர்கள்Netflix household -ஐ அமைக்க வேண்டும். இது அடிப்படையில் நெட்ஃபிளிக்சில் நிகழ்ச்சிகளைப் பார்க்க நீங்கள் அதிகம் பயன்படுத்தும் டிவியாகும். இந்த டிவியின் இணைய இணைப்பைப் பயன்படுத்தும் சாதனங்கள் தானாகவே பயனர்களின் Netflix ஹவுஸ்ஹோல்டில் ஒரு பகுதியாக இருக்கும் என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

Netflix household -ஐ அமைக்க, பயனர்கள் இந்த செயல்முறைகளைப் பின்பற்றலாம்:

1. உங்கள் வீட்டு இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள டிவியைப் பயன்படுத்தி Netflix இல் சைன் இன் செய்யவும்.

2. உங்கள் டிவியில் உள்ள நெட்ஃபிக்ஸ் முகப்புத் திரையில் இருந்து மெனுவைத் திறந்து, Get Help மற்றும் Manage Netflix Household -ஐ செலக்ட் செய்ய வேண்டும். 

3. Confirm Netflix Household or Update My Netflix Household என்ற டேபை கிளிக் செய்யவும். 

4. இப்போது, Send Email அல்லது Send Text விருப்பத்திலிருந்து தேர்வு செய்யவும். நீங்கள் அதைச் செய்தவுடன், நீங்கள் Netflix இல் பதிவுசெய்த கணக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு இணைப்பு அனுப்பப்படும். இணைப்பு 15 நிமிடங்களில் காலாவதியாகிவிடும். எனவே இதற்குப் பிறகு விரைவாகச் செயல்படவும். மேலும், நீங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபோன் எண் இரண்டையும் சேர்க்கவில்லை என்றால், வெரிஃபை செய்ய நீங்கள் சேர்த்துள்ள ஒரு விருப்பம் மட்டும் கிடைக்கும். 

5. வெரிஃபிகேஷன் இணைப்பைக் கிளிக் செய்தவுடன், Yes, This Was Me என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர, Confirm Netflix Household or Update Netflix Household  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இத்துடன் செயல்முறை நிறைவுபெறும். உங்கள் டிவி திரையில் இதற்கான உறுதிப்படுத்தல் காட்டப்படும். இது தவிர உறுதிப்படுத்தல் மின்னஞ்சலையும் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | இந்திய அரசு அளிக்கும் Free AI Training, 9 மொழிகளில் கிடைக்கும்: விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News