இலவசமாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வேண்டுமா? உடனே இதை படியுங்கள்

Free Amazon Prime Membership: தற்போது மக்கள் மத்தியில் வெப் சீரிஸின் மோகம் அதிகளவு அதிகரித்துள்ளது. அந்தவகையில் தற்போது அமேசானின் பிரைம் சந்தா தொடர்பாக மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 09:44 AM IST
  • இலவச சந்தாவை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்.
  • இந்த திட்டத்தில் நீங்கள் Netflix மற்றும் Amazon Prime சந்தாவையும் இலவசமாகப் பெறுவீர்கள்.
  • தற்போது வெப் சீரிஸ் பார்க்கும் ட்ரெண்ட் அதிகமாகிவிட்டது.
இலவசமாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வேண்டுமா? உடனே இதை படியுங்கள் title=

இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்: தற்போது வெப் சீரிஸ் பார்க்கும் ட்ரெண்ட் அதிகமாகிவிட்டது. OTTயில் பல படங்கள் நேரடியாக வெளியாகின்றன. இதில் Amazon Prime மற்றும் Netflix, Hotstar ஆகியவை மிகவும் பிரபலமான OTT இயங்குதளங்களாகும். ஆனால் அனைவராலும் இந்த மூன்று ott பிளாட்பார்முக்கான சந்தாவை பெற முடியாது, ஆனால் நீங்கள் இதில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை இலவச சப்சக்ரிப்ஷனை பெறலாம், எப்படி என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். 

இலவச சந்தாவை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம்
* இதற்கு முதலில் அமேசான் கணக்கில் லாகின் செய்யவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
* இதற்குப் பிறகு, Start your 30-day trial என்பதைக் கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு பணம் செலுத்தும் முறை என்ற விருப்பம் வரும். இதில் உங்கள் கிரெடிட் / டெபிட் / ஏடிஎம் கார்டில் இருந்து கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
* இதற்குப் பிறகு நீங்கள் 30 நாட்கள் Trial membership ஐப் பெறுவீர்கள்.
* இந்த திட்டத்தில், 30 நாட்கள் முடிவதற்குள் உங்கள் கணக்கில் இருந்து ரூ.1499 கழிக்கப்படும்.
* இந்தத் திட்டத்தைத் தொடர விரும்பவில்லை என்றால், 30 நாட்களுக்கு முன்பே அதை ரத்துசெய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | AI தொழில்நுட்பம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் - பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டுவிடாதீர்கள்

இது தவிர, பல மொபைல் போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்தில் பல OTTகளின்  Free subscription ஐ வழங்குகின்றன. அப்படியென்றால் அந்த திட்டங்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

ஜியோ திட்டத்தை சரிபார்க்கவும்
நீங்கள் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோவை இயக்க விரும்பினால், நீங்கள் ஜியோவின் ரூ.699 திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம். இதில் நீங்கள் அன்லிமிடெட் காலிங் பலன்கள், மொத்தம் 100 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை பெறுவீர்கள்.

ஜியோ போஸ்ட்பெய்ட் 599 ரூபாய் திட்டம் (Jio Postpaid 599 Rs Plan)
இந்த திட்டத்தில் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்புடன், இந்த திட்டத்தில் நீங்கள் Netflix மற்றும் Amazon Prime சந்தாவையும் இலவசமாகப் பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூபாய் 499 போஸ்ட்பெய்டு பிளான் (Airtel 499 Postpaid Plan)
இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 75 ஜிபி டேட்டாவும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும், இவற்றுடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த ப்ளானில் இணைபவர்களுக்கு 6 மாதம் வரையிலான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இலவசமாக அளிக்கப்படுகிறது.

ஏர்டெல் 1199 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel 1199 Postpaid Plan)
இந்த திட்டத்தில், நீங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஐ பெறுவீர்கள். இதனுடன், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் சந்தா இலவசமாக வழங்கப்படும்.

ஏர்டெல் 1199 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel 1199 Postpaid Plan)
இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புடன் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில், உங்களுக்கு Amazon Prime மற்றும் Disney+Hotstar இன் இலவச சந்தா வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ChatGPT மூலம் நீங்கள் கோடீஸ்வரரும் ஆகலாம்... அது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News