திடீரென பேஸிக் பிளானை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்பிளிக்ஸ்!

நெட் பிளிக்ஸ் நிறுவனம் திடீரென அடிப்படை பிளான்களை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் புதிய பிளான்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 28, 2023, 05:14 PM IST
  • நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவு
  • பல்வேறு நாடுகளில் பேஸிக் பிளான் நீக்கம்
  • புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது
திடீரென பேஸிக் பிளானை ரத்து செய்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்பிளிக்ஸ்!  title=

கொரோனா காலத்துக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களின் வளர்ச்சி அபாரமாகிவிட்டது. அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓடிடியில் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. மற்ற நிறுவனங்களின் வருகை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த நிறுவனம் பல மறுசீரமைப்புகளை செய்து வருகிறது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பிளான்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய பிளான்கள் அறிமுப்படுத்தப்பட்டு வருகிறது. 

இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடிப்படை பிளான் ஒன்றை நீக்கியிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் இனி இதை பெற முடியாது. அதேநேரத்தில் பழைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நிருக்கும். அவர்கள் மெம்பர்ஷிப்பில் இருந்து விலகும்பட்சத்தில் அவர்களுக்கும் முன்பிருந்த பேஸிக் பிளானை பயன்படுத்த முடியாது.  இனி வரும் நாட்களில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் திட்டங்களின் வீடியோ குவாலிட்டி முக்கிய பங்கு வகிக்கும். 1080p HD ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கும் வகையிலான திட்டங்கள் இருக்கும்.

மேலும் படிக்க | Flipkart-ல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: பழைய போன், டிவி, ஃப்ரிட்ஜ் விற்று சம்பாதியுங்கள்

இருப்பினும், விளம்பரங்களை அகற்றி பதிவிறக்கத்தை அணுக பயனர்கள் இப்போது CAD 16.99 செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் திட்டம் பயனர்களுக்கு HD மற்றும் அல்ட்ரா HD ஸ்ட்ரீமிங், பிரத்தியேக உள்ளடக்கம், விளம்பரங்கள் இல்லாதது மற்றும் பதிவிறக்கும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது.

நெட்பிளிக்ஸ் என்ன சொல்கிறது? 

விளம்பரம் இல்லாத அடிப்படை திட்டத்துடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்காலத்திலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, பிரேசில், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை விளம்பரங்கள் ஸ்ட்ரீமிங் திட்டத்தை நெட்ஃபிக்ஸ் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில், விளம்பரம் இல்லாத திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதை மேலும் இலவசமாகப் பார்க்க முடியும்.

இதற்கிடையில், நெட்ஃபிக்ஸ் அதன் அடிப்படை திட்டத்தை ஆப்பிள் டிவி பயனர்களுக்கான விளம்பரங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பொருள் ஆப்பிள் டிவியில் நெட்ஃபிக்ஸ் பயனர்கள் இப்போது விளம்பரங்களுடன் அடிப்படைத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | சாம்சங்கின் சூப்பர் டூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்! வியக்கவைக்கும் அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News