WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: Vi அதிரடி திட்டம் அறிவிப்பு

Vi இன் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் வழங்கி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 08:46 AM IST
  • Vi இன் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்
  • குறைந்த செலவில் மாதத்திற்கு 3.5TB டேட்டாவைப் பெறுங்கள்
  • அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: Vi அதிரடி திட்டம் அறிவிப்பு title=

கோவிட் காரணமாக, இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் வேலை செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், மீண்டும் அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் வீட்டில் இருந்து வேலை மற்றும் வீட்டில் இருந்து படிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. வீட்டிலிருந்து படிப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடங்கும் போது, ​​பயனர்களிடையே தரவுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்குகிறது. அதிலும் அதிக டேட்டா நன்மை கிடைக்கும் பட்ஜெட் விலை திட்டங்களின் மீதே மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதன்படி வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது வியின் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களின் (Vi Broadband plans) விருப்பங்களை இன்று நாங்கள் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். அதன் முழு விவரம் இதோ.

ALSO READ | பயனர்களுக்கு வாட்ஸ்அப் வழங்கும் அசத்தலான புதிய வசதி! 

Vodafone Idea பிராட்பேண்ட் திட்டங்கள்
வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் ஆன்லைன் வேலை செய்யும் இந்த காலகட்டத்தில், அனைவருக்கும் அதிவேக இணையம் தேவைப்படுகிறது, இது மொபைல் டேட்டாவை விட ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான Vi அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான You Broadband மூலம் அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. U பிராட்பேண்டின் இரண்டு அற்புதமான பிராட்பேண்ட் திட்ட விருப்பங்களைப் பற்றி நாம் இன்று காண உள்ளோம். 

Vi இன் திட்டம் 200Mbps ஸ்பீட்
Vi இன் இந்தத் திட்டத்தில், 200Mbps டேட்டா வேகத்தின்படி பயனர் ஒவ்வொரு மாதமும் 3.5TB இணையத்தைப் பெறுகிறார். மேலும், பயனர் நிறுவனத்திடமிருந்து மோடம் மற்றும் ரூட்டரைப் பெற விரும்பினால், ஒரு முறை பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1,999 செலுத்திச் செய்யலாம். இந்த வைப்புத் தொகை திரும்பப் பெறப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த திட்டத்திற்கு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1,062 ரூபாய் செலுத்த வேண்டும், இதில் ஏற்கனவே ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டுள்ளது.

Vi இன் திட்டம் 100Mbps ஸ்பீட்
மாதத்திற்கு ரூ.826 விலையுள்ள இந்த திட்டத்தில், மொத்தமாக ஒவ்வொரு மாதமும் 3.5ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். பயனர் நிறுவனத்திடம் இருந்து மோடம் மற்றும் ரூட்டரைப் பெற விரும்பினால், ரூ.1,999 ஒரு முறை பாதுகாப்பு வைப்புத் தொகையைச் செலுத்து வேண்டும். இந்த வைப்புத் தொகை திரும்பப் பெறப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த திட்டத்தின் விலையில் ஜிஎஸ்டி ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

ALSO READ | Recharge: குறைந்த விலையில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் BSNL..! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News