வீடியோ: ஸ்டண்ட்மேன் ஆகா மாறிய CSK வீரர் முரளி விஜய்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முரளி விஜய்யின் இன்ஸ்ட்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 26, 2018, 02:19 PM IST
வீடியோ: ஸ்டண்ட்மேன் ஆகா மாறிய CSK வீரர் முரளி விஜய் title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 

Video: டோனியின் பயிற்சி ஆட்டத்தை தடுத்து நிறுத்திய சிறுவன்!

ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ம் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் போட்டோ, வீடியோ மற்றும் ட்வீட் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

சிஎஸ்கே: வைரலாகும் எம்.எஸ் தோனியின் பார்க்கிங் ஷாட் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு முரளி விஜயை ஏலம் எடுத்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு முரளி விஜய் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. முரளி விஜய் சமூக ஊடகத்தில் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், முரளி விஜய் மீண்டும் தனது இன்ஸ்ட்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஒரு வேடிக்கையான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், முரளி ஒரு மெல்லிய கயிற்றில் நடந்து செல்கிறார். இது பார்ப்பதற்கு ஸ்டண்ட் செய்கிற மாதிரி தெரிகிறது. ஆனால் கயிறுக்கும் தரைக்கும் இடைவெளி குறைவு தான். 

முகமது ஷமி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த மனைவி ஹசின் ஜகான்

 

ஐபிஎல் போட்டிகளில் முரளி விஜய் இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது சராசரி 26.43. மொத்தம் 2511 ரன்கள் அடித்திருக்கின்றார். ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் 127 ஆகும். இவர் இரண்டு சதமும், 13 அரை சதமும் அடித்துள்ளார். 237 பவுண்டரி மற்றும் 89 சிக்சர்கள் விளாசி உள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டோ

சென்னை அணிக்கு மொத்தம் 25 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் எம்.எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், டியூ பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண், பிராவோ, துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய், கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், மார்க் வுட், முகமது இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி சாணி கிடி, மோனு சிங் ஆவார்கள்.

Trending News