உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் பரபரப்பு அறிக்கை... முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்!

பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில்,  உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 10, 2023, 01:59 PM IST
  • உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தனது நாடு அமைதி ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
  • ஜூன் 8 அன்று கெர்சனுக்கு ஜெலென்ஸ்கியின் வருகைக்குப் பிறகு இந்த அறிக்கை வந்தது.
  • ஜாஃபோரிஸ் பகுதியில் உக்ரைன் ராணுவத்தின் வியூகம் தோல்வியடைந்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் பரபரப்பு அறிக்கை... முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்! title=

கியேவ்: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் பிப்ரவரி 2022 முதல் நீடிக்கிறது. சமீபத்தில், உக்ரைனின் நோவா ககோவ்கா அணையும் ரஷ்யாவில் இருந்து குண்டுவெடிப்பு மூலம் தகர்க்கப்பட்ட நிலையில் பெரும் பதற்றம் மூண்டது.  எனினும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் சமீபத்திய அறிக்கை, ரஷ்யாவுடன் நடந்து வரும் போர் வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார். எனினும், ​​பேச்சுவார்த்தை அறிக்கை குறித்து ரஷ்யாவிடம் இருந்து எந்த கருத்தும் இல்லை. ஆனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைந்தால், அது மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், 'பேச்சு வார்த்தை மற்றும் அமைதி உடன்படிக்கைக்கு உக்ரைன் தயாராக உள்ளது' என்றார். ஆனால் இத்துடன் ஒரு நிபந்தனையும் போட்டுள்ளார். சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா சில மாற்றங்களைச் செய்யும் போது தான் இது நடக்கும் என்றும், அப்போதுதான் பேச்சு வார்த்தை சாத்தியமாகும் என்றார். ஜூன் 8 அன்று உக்ரை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் மிகப் பெரிய அணை தகர்க்கப்பட்ட கெர்சன் பகுதிக்கு பயணம் செய்த பின்னர் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கை வெளி வந்தது. ஜாஃபோரிஸ் பகுதியில் நடந்து வரும் தாக்குதல் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய அவர் இங்கு வந்திருந்தார். இந்தப் பகுதியில் உக்ரைன் ராணுவத்தின் வியூகம் தோல்வியடைந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெஸ்னிகோவ் வெளிப்படுத்துவது ஜெலென்ஸ்கியின் கருத்து தான்: நிபுணர்கள்

ரஷ்ய இராணுவம் பல உக்ரேனிய டாங்கிகளை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஐரிஸ்-டி வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஹென்சோல்ட் டிஆர்எம்எல் -4 டி ஏஇஎஸ்ஏ ரேடாரை ரஷ்ய இராணுவம் அழித்தது. ஜெலென்ஸ்கியே ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை பகிரங்கமாக கேட்க முடியாது என்பதால், பாதுகாப்பு அமைச்சர் மூலம் உக்ரைன் தூது விடுவதாக உலக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், உக்ரைன் அதிபர் அவ்வாறு செய்தால், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளுடனான அவரது உறவுகள் பலவீனமடையும். ரெஸ்னிகோவின் அறிக்கை ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை விலக்கிக் கொள்ள கோரும் அழைப்பா என  பலர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிபந்தனையுடன் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு முன்னேறினால், ரஷ்யா அதை நிராகரிக்கலான் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | உக்ரைனின் மிகப் பெரிய அணையை தகர்த்த ரஷ்யா... அழிவின் விளிம்பில் உக்ரைன்?

ரஷ்யாவின் கருத்துக்காக காத்திருக்கும் உக்ரைன்

ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளிவரவில்லை. பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள ரஷ்ய அதிகாரிகள் முயற்சித்து வருவதாக நம்பப்படுகிறது. ரெஸ்னிகோவ் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை உள்ளதா என்பதை அவர் அறிய விரும்புகிறாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்ய ஜெலென்ஸ்கி முடிவெடுத்த அதே அமைச்சர்தான் ரெஸ்னிகோவ். கடும் தணிக்கை செய்யப்படும் என எண்ணிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் கழித்து அவரும் எந்த கேள்வியும் கேட்கப்படாமல், ரகசியமாக மன்னிக்கப்பட்டார். அத்தகைய சூழ்நிலையில், ஜெலென்ஸ்கி மற்றும் ரெஸ்னிகோவ் இடையே உறவுகள் நிலை எப்படி இருக்கிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. எனினும், ரெஸ்னிகோவின் முன்மொழிவை நிராகரிப்பதற்கு பதிலாக, ரஷ்யா அதை ஒருமுறை சோதிக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | ஆணாதிக்க தாலிபன்களின் விஷ முகம்! 1-6 வகுப்பு மாணவிகளுக்கு நஞ்சு கொடுத்த பள்ளிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News