World Bizarre News: இங்கிலாந்து நாட்டின் விகான் நகருக்கு அருகில் டில்டெஸ்லி என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்போது 46 வயதான ஜூலி மோரிஸ் என்ற அந்த பெண் துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு ஏற்றுக்கொள்ள இயலாத அளவிற்கு தன்னுடைய காதலன் உடன் சேர்ந்து கடுமையான பாலியல் சீரழிவு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் வெளிச்சத்திற்கு வரவே அவர் மீது தண்டனை பாய்ந்தது. அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. ஜூலி இந்த தவறான நடத்தை வழக்குகளை கையாளும் பொறுப்பு கற்பித்தல் ஒழுங்குமுறை நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. அவரது வழக்கை மறுஆய்வு செய்ய மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த பிப். 19 அன்று தனது விசாரணையை தொடங்கியது.
ஆசிரியைக்கு வாழ்நாள் தடை
இந்த விசாரணையின்போது ஜூலி வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அதன்பேரில், அந்த வழக்கு பொது விசாரணை மோரிஸ் முன்னிலையில் நடைபெறவில்லை. ஜூலியும் கூட அந்த விசாரணையில் பங்கேற்கவில்லை. ஜூலியின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகள் அவர் ஒரு ஆசிரியராக இருப்பதற்கு அடிப்படையிலேயே தவறாக இருப்பதாக அந்த மூன்று பேர் கொண்ட குழு முடிவு செய்தது. இதனால் அவர் இனி ஆசிரியர் பணியில் ஈடுபடவே முடியாத அளவிற்கு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!
மேலும், அந்த குழு தனது அறிக்கையில்,"ஜூலி மோரிஸ் தனது பள்ளியின் பாதுகாப்பில் முன்னணியில் இருந்தார் என்பது அவரது மேற்கொண்ட குற்றத்தை மேலும் அதிர்ச்சியடையச் செய்கிறது. மேலும், அவரது பள்ளியில் நலனுக்கும், பாதுகாப்புக்கும் நியமிக்கப்பட்ட நபர் ஆவார். அவர் தனது பொறுப்பை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்" என தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட குழந்தை அவர் பள்ளியில் பயிலவில்லை என்றாலும், அவர் அந்த பதவியை குற்றத்தை மறைப்பதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தகுதியற்றவர்
மேலும், ஜூலி மோரிஸ் தனது தவறான நடத்தையை மீண்டும் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் அந்த குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவரது நடவடிக்கைகள் வேண்டுமேன்ற செய்யப்பட்டது என்றும் அவர் வேறு ஒருவரின் நிர்பந்தத்தின் கீழ் செயல்படுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலியை ஆசிரியர் பணியில் இருந்து தடை செய்யும் முடிவை எடுத்த டேவிட் ஓட்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் அதில் கூறுகையில்,"தனக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜூலி மோரிஸ் மீண்டும் ஆசிரியராக பொறுப்பேற்கவும், மாணவர்களுக்கு கற்பிக்கவும் தகுதியற்றவர் என நான் முடிவெடுத்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
இதுபோன்ற ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் குழந்தைகளிடமும் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகமாகி உள்ளது. இதே இங்கிலாந்தில் காண்டிஸ் பார்பர் என்ற ஒரு பெண் ஆசிரியை 15 வயது மாணவர் ஒருவருடன் கட்டாய உடலுறவு கொண்டதை தொடர்ந்து, அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 6 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க நாட்டின் விர்ஜினியா நகருக்கு அருகே உள்ள ஹென்ரிக்கோ கவுண்டியின் பள்ளி ஆசிரியரான மேகன் பாலைன் ஜார்டன் என்பவர் தன்னிடம் பயிலும் 14 வயது மாணவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அந்த 14 வயது சிறுவனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமால் சென்று பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 50 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உடலுறவு... 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை - 50 ஆண்டுகள் சிறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ